முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீடிரென பல இடங்களில் காட்சி பெறும் புத்தர்.. பெளத்த தத்துவங்கள் என்ன?

இப்போது புத்தரின் படங்களை பல தளங்களில் பார்க்கிறேன். அவையெல்லாம் புத்தர் குறித்து பேசுவன அல்ல. வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என்ற அழைப்பின் வெளிப்பாடுகள். அல்லது புத்தர் என்ற குறீயிட்டின் படி தாங்கள் யாரென்பதை சொல்லும் சாதி விசயங்கள்.  அம்பேத்கர் பெளத்தம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். அல்லது ஏற்க வைக்கப்பட்டார். அதே அம்பேத்கர் முதலில் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தான் சொல்கிறார். இஸ்லாம் கிறிஸ்தவம் என எங்கும் செல்லுங்கள் என்ற அழைக்கிறார். பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொஞ்சம் நிலை மாறுகிறார், பேசுகிறார். பின்னர் அவர் பெளத்தம் முழுமையாக தழுவுகிறார். ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட ஏதுமில்லை. மதம் என்பது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலகெங்கும் நாங்கள் எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா என தற்பெருமை பேசும் நிறுவனங்கள் தானே மதங்கள்.... இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொறு மதமும் ஒரு கொடுரத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது.  ஆனால் நாமெல்லாம...