தமிழ்நாட்டில் “பிளைண்ட்” பாலிடிக்ஸ் அதிகம். தனக்கு பிடித்தவர் சொல்கிறார் அதுதான் வேதவாக்கு என நம்பி பேசி அலையும் அரசியல். நீட் தேர்வு : நீட் தேர்வால் ஊழல் ஒழிப்பு, ஏழைகள் படிக்கலாம், கல்லூரிகளில் லஞ்சம் வாங்க முடியாது என உருட்டுவார்கள். கொஞ்சம் நெருங்கி அடுத்தடுத்து கேள்வி கேட்டால் தப்பி ஓடுவார்கள் இந்த மூடர்கள். நாம் கொஞ்சம் பேசிப்பார்ப்போம். நீட் தேர்வும், ஐ.ஏ.எஸ் தேர்வும் ஒன்றா ? இல்லை. ஐஏஎஸ் தேர்வு வேலைக்கானது. நீட் தேர்வு படிப்புக்கானது. சரி. நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் ஒன்றா ? அதுவும் இல்லை. ஜேஇஇ என்பது குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே சேருவேன், அதுதான் தகுதி, தரம், எனக்கான வாய்ப்பு என்பவர்களுக்கான தேர்வு. அதுவும் நீட்டும் ஒன்றல்ல. எனில் நீட் யாருக்கு ? நீட் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்பவர்களுக்கான தேர்வு. இந்தியாவில் உள்ள மருத்துவம் படிக்க விரும்பும் எவரும் இந்த தேர்வை எழுத வேண்டும். ஏன் எழுதினால் என்ன ? ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு படிப்பு இருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட படிப்புகள் இருக்கும் போது ஒரு படிப்பை அடிப்படையாக கொண்டு தேர்வு ...
இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள். அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர். சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...