இந்த உலகத்தில் ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..? அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும். அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.
அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும்.
எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை. அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும்.
இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு நிக்க வச்சா, நாம இன்னொருத்தரை அன்பு டைம்டேபிள் போட்டு நிக்க வச்சிருப்போம். அதுல ஒரு திருப்தி நாமளே உணர்ந்துப்போம்.
அன்பா இருக்கிறதுக்கு அந்த நேரத்து உண்மை போதும். அது அனுபவிக்கிறக்கப்பா இருக்கிற உணர்வு அன்பு டைம் டேபிள்ள கிடைக்காது. ஆனா அந்த நேரத்து உண்மையை விட ஒப்பீட்டு உண்மைகள் தான் முக்கியம்னு ஆன பிறகு இங்கே எல்லாமே அன்பு என்ற எசன்ஸ் ஊத்திய முன்னால் அன்பும், வெறுப்பும், நம்பிக்கையின்மையும் தான்.
அன்பா இருக்க எதுவுமே செய்யத் தேவையில்லைனு புரியும் போது அன்பா இருப்போம். அதுவரை அன்பா இருப்பதை காட்ட முயற்சித்துகொண்டே இருப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக