முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும்.

ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை.

இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்:

"நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார்.

"என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார்.

அவ்வளவுதான்.

மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை.

“கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையில்லை.

அப்போது அவருக்கு அந்த அறிவு அல்லது பக்குவம் இருக்காது.

இப்போது தான் "வேலை செய்தவர்களுக்கு பதவி" என்ற புரிதலுக்குத் திரும்பி வந்திருக்கலாம்.

ஆனால் ராமதாசுக்கு அது தோன்றவில்லை. பதவி ஒன்றே இருந்தது — அதை மகனுக்கே ஒதுக்கினார்.

ஆனால்… அன்புமணியின் மனைவி கடந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதற்கு முன்னர், அவர் "பசுமை தாயகம்" என்ற ஒரு இயற்கை சார்ந்த சமூக அமைப்பை நடத்தினார் என கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அவரை வேட்பாளராக அறிவித்ததும், அவருடைய குழந்தைகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்தியதும், அந்த வீடியோக்கள் தொலைக்காட்சிகளில் பெரிய செய்தியாக வெளியானதும் — அப்போது இந்த தெளிவான விமர்சனம் ஏன் எழவில்லை என்பதே இப்போது எழும் முக்கியக் கேள்வி.

இது உண்மையில் குடும்ப சண்டைதான். ஆனால்…  "ஒரே"குடும்பம் என்பதுக்கும்,

"என்" குடும்பம் என்பதுக்கும் இடையிலான வேறுபாடுதான் இன்று கட்சியில் மோதலுக்குக் காரணம்.

தன் பெண் வழி குழந்தைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என பெரியவர் விரும்பினார்.அது முடியவில்லை. இப்போது சின்னவர் தன் வழி வாரிசுகளுக்கே முன்னுரிமை தர விரும்புகிறார்.

இனிமேல் இந்த சண்டை தீருமா?

திமுகவை குடும்ப அரசியல் என விமர்சிக்கும் கட்சிகள்,

பிற கட்சிகளில் நடைபெறும் குடும்ப அரசியலை பற்றி பேசவே மாட்டார்கள்.

தேமுதிகவில் மாநிலங்களவை எம்.பியாக யார் வருவார் ?  ( எடப்பாடி அதிமுக ஒரு சீட் ஒதுக்கினால் கற்பனைக்கு )

விஜயகாந்தின் மனைவி?  மச்சான்? மகன்?

இதில் ஒருவர்தான் வருவார்கள்.

அல்ரெடி வைகோ (மதிமுக) கட்சியில் பார்த்தாகிவிட்டது. இதுதான் இன்று இந்திய கட்சிகளின் நிலைமை.

முடிவாக... இந்திய அரசியலில் வாரிசு அரசியல் இல்லாத கட்சிகள் இல்லையா?

ஆர்.எஸ்.எஸ்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்

ஆனால் இரண்டிலும் வேறு ஒன்று உண்டு. அது இப்போது பேச தேவையில்லை. 

🔚 பாட்டாளி மக்கள் கட்சி நிலவும் பிரச்சினை ஒன்றுதான். அது பணம் யார் வழியாக பிரித்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். விரைவில் எல்லாம் சமாதனம் ஆகும். இல்லையேல் அன்பு மணி தான் இனி கட்சியை முன்னெடுப்பார்.

பார்ப்பனியம் எப்படியெல்லாம் பலம் வாய்ந்த சிற்றரசுகளை வீழ்த்தியது என்பது வரலாற்றில் படித்திருக்கிறோம். இப்போது பார்க்கிறோம். அது கூடிக்கெடுப்பது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும் சுகம் நாடும் உயிருக்கும் சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍 Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க 1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction 2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க 3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது 4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது 5. particular season ல அந்த season ஓட impact ஆ...