மனோஜ் : தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனரின் மகன். பாரதிராஜா படங்களில் சாதீயம் இருந்தாலும் தமிழகத்தின் கிராமங்களை கொஞ்சம் காட்டியவர் என்ற வகையில் அவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதியபாதை என சொல்ல முடியும். அவரை யொற்றி சிலர் அவரையும் தாண்டி சென்றார்கள். ஆனாலும் அவரின் பாதை தனிப்பாதைதான்.
மனோஜ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக உச்சம் தொட வேண்டியவர். அவரின் முகம் இயல்பாகவே குற்ற உணர்ச்சி கதாபாத்திரத்திற்கு அப்டியே பொறுந்தி போகும் தன்மையுள்ளது. பல படங்களில் மனோஜ் நடித்திருந்தாலும் அல்லி அர்ஜூனா, கடல் பூக்கள் அவர் பயணத்தில் முக்கியமானது. இரண்டு படங்களில் இறுதிக்காட்சியில் அவர் அந்த கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வியை கொண்டு வந்திருப்பார். ஆனால் இரண்டுமே கண்டுகொளப்படவில்லை. பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அவரும் அமைத்துக் கொள்ளவில்லை.
பாரதிராஜா அவருக்கு கொடுத்த துவக்கம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்லையும் நடிக்க வைப்பார் என்பது பாரதிராஜா பற்றி சொல்லும் சொல். ஆனால் பாரதிராஜாவின் திரைகதையாக்கத்தில் ஒரு கல்லும் நடிகராக தெரியும் என்றே நான் நினைக்கிறேன். அந்த பாரதிராஜா தாஜ்மஹால் படத்தில் திரைகதையை கவனிக்காமல் விட்டார். வியூ பைண்டரில் பாரதிராஜாவுக்கு மனோஜ் நடிகராக தெரியாமல் மகனாக தெரிந்து தொலைத்தார் போல... பாடல்கள் ஹிட்டடித்து, திரையுலக பிரம்மாக்கள் ஆசிர்வாதம் செய்தும்... படம் பெரும் பின்னடவை சந்தித்தது.
இந்த பெரும் தோல்வியை மனோஜ் காலம் முழுக்க சுமக்க நேரிட்டது. பொம்மலாட்டம் படத்தின் மூலம் மீண்டும் தான் யாரென பாரதிராஜா நீருபித்தாலும் மனோஜுக்கு அப்படியொரு வாய்ப்பு அமையவே இல்லை. சில நேரம் சில அடையாளங்கள் சிலரை பெரிதாக ஜொலிக்கவிடாது. அதனை உடைப்பது பெரிய காரியம். எல்லாராலும் அது முடியவில்லை. மனோஜால் முடியவில்லை. அல்லது அவர் விரும்பவில்லை.
மனோஜை முதலில் இருந்தே கதைகேட்டு கதை சொல்லி இயக்கி பழக்கி இருந்தால் இந்நேரம் வெறு ஒரு உச்சம் தொட்டு இருப்பாரோ என தோன்றுகிறது. ஆனால் அதற்கும் பெரிதாக வாய்ப்பில்லை. பாரதிராஜா பண்ணைப்புரத்திலிருந்து பசியோடு கிளம்பியவர். ஆனால் மனோஜ் சென்னையில் இருந்து ஏசி காரில் ஷூட்டிங் ஸ்பாட் வந்தவர். அதனால் இருக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் பாரதிராஜா பல வெற்றிகளை சூடி இருந்தாலும், இயக்குனராக தமிழ் திரையுலக வரலாற்றில் தடம் பதித்திருந்தாலும் மனோஜிடம் அவர் தோற்றுவிட்டார். மரணத்திலும்
கருத்துகள்
கருத்துரையிடுக