முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Instagram Reelsல் கெத்தான பெண்கள்... கேலிக்கூத்தாகும் ஆண்கள்

எப்போது ரீல்ஸ் (Reels) பார்த்தாலும் அதில் பெண்களின் கவர்ச்சி ரீல்ஸ் , ஆண்களுக்கு அதற்கு வாய்ப்பில்லை... அதனால் சில கேலிக்கூத்துகளை செய்து வரும் ரீல்ஸ் ஒரு பக்கம். இரண்டுமே கண்களில் படும். இதனை தாண்டி சில முத்துக்கள்  அரிதாய். 

முதலில் பெண்கள். அவர்கள் அவர்களின் கவர்ச்சியை நம்பியே வருகிறார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்கலாமா என்றால் இந்த கேள்வியை நடிகைகள் படத்தில் காட்டிய கவர்ச்சியில் கேட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் இந்த ரீல்ஸ்கள். ஏன் யாரோ கட் சொல்லி வருவது மட்டுந்தான் நடிப்பா... சம்பாத்தியமா , அவர்களே கட் சொல்லி மொபைலில் எடுத்தால் அது தவறாகிவிடுமா ? 


எதனை சொல்லி அவர்களை மதங்கள் அடக்கியதோ அதனை முன் வைத்து இப்போது சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சும்மா திட்டிக்கலாம்... அங்கே அத்தனை லட்சம் வியூ ஆகுதே.... அதெல்லாம் பார்க்கிறது யாரு ? கீழே கமெண்ட் செக்சன் பாத்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தெரியும். அக்கா உங்க கூட ஒரு நாள்.... நு பல கமெண்ட்... டேய் அக்கா கூட எப்டிடானு கேட்க தோணுது. இந்த மாதிரி வீடியோ போடும் “அக்கா”களுக்கு ஃபாலோயர் யாருனு எட்டிப்பாருங்க.. உங்க நண்பர்கள் சிலர் இருப்பார்கள். மீதி எல்லாம் ஃபேக் ஐடில இருப்பாங்க. 


இது சரியா தப்பா என்றால் அது அப்படித்தான்... சரி தப்பு சொல்ல நாம யாரு... 

பணம் தான் மரியாதைனு ஆனபிறகு, பணம் இருந்தால் தான் கொஞ்சமாச்சும் சுயமரியாதையோடு வாழ முடியும்னு சமூகம் உருவாகும் போது அப்படித்தான் நடக்கும். ஒரே வழி நீங்க பிளாக் செஞ்சுட்டு போறது. இல்ல நீங்களும் பார்த்துட்டு போறது.

அய்யோ குழந்தைகள் எதிர்காலம்னு வருத்தப்பட்டா.. கண்டிப்பா அது வருத்தம் இல்லை பொறாமை. நா ஒரு பிட் படம் பார்க்க ஊர் கோடியில உள்ள தியேட்டருக்கு போனேனு சொல்லும் தலை முறையும், இந்த மாதிரி எல்லாம் பார்க்க புரெசிங் செண்டர் போனேன் சொல்லும் தலைமுறையும் தான்.... இல்லாட்டி ரீல்ஸ் பார்த்து வீடியோ பார்த்துட்டு வந்து புலம்பும் நவீன நல்லவர்களாக தான் இருக்கும்... 

நானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி பக்கங்களை ரிப்பொர்ட் அடிச்சேன்.. ஆனா அல்காரிதம் அதை எல்லாம் கொசுறா கூட மதிக்கல... அப்ப தான் சில விசயம் யோசிச்சேன்.. புரிஞ்சது...

இதுல ஆண்கள் நிலைமைதான் பாவம்... தன்னை கோமாளியாக்கினா தான் நிக்க முடியும்னு தெரிஞ்சு அதைதான் பலரும் செய்றாங்க. அதுக்கும் லட்சகணக்கில வியூவும் வருது. இதை தாண்டி பேமிலியா ஒரு சில டிராமா செய்றாங்க.. சில வொர்க் அவுட் ஆகுது, சில எரிச்சலாதான் இருக்கு.....

இது எல்லாமே அவங்க சுயமா தெளிவான நிலையில தான் செய்றாங்க.. ஒரே காரணம்.. பணம்... இது இன்னும் செமய போகுமே தவிர கட்டுக்குள் வர வாய்ப்பில்லை... ஒன்னு ஜோதில கலந்துகோங்க, இல்லை கண்டுக்காம போங்க.. தேவையில்லாம டென்சன் ஆகாதீங்க.... அல்ரெடி தமிழ்நாட்ல பிபிக்கு நிறைய காரணம் இருக்கு. இதுக்காக உடம்ப கெடுத்துக்க வேண்டாம்... உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இது நடந்துகிட்டே தான் இருக்கு. 
எதை பலகீனம்னு சொல்லி அடக்கி வைக்கிறோமோ அந்த பலகீனம் தான் நம்மை அடிமையாக்கும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...