இந்தியாவின் பொருளாதார சுழற்சிகளில் பண்டிகைகளுக்கு பெரிய பங்கு உண்டு. பண்டிகைகள் பின்னால் மூடத்தன கதைகளை தாண்டி பணம் ஒரு சுற்று சுற்றி செல்லும். இந்த ஒரு காரணத்திற்காக மக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்கலாம். பெரும்பாலான சிறுவணிகர்களுக்கு இந்த பண்டிகைகள் கொஞ்சம் போனசாக வருமானத்தை கொடுக்கும். தீடிரென முளைக்கும் சாலைகடைகள், தன்னை பெரிதாக அலங்கரித்துகொள்ளும் பெரிய கடைகள் என இந்த பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பண்டிகை நெருங்கினாலும் தொழில் நகரங்களில் பணப்புழக்கம் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். குறிப்பாக சிவகாசியில் கடைசி 20 நாள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியெதும் இல்லை. இவற்றுக்கெல்லாம் துணிக்கடைகள், பட்டாசுகடைகள் அதிகரித்திருப்பது ஒரு காரணமாய் இருந்தாலும் செலவழிக்கும் திறன் குறைந்திருக்கிறது என்கிறார்கள். அதாவது,பண்டிகைகளுக்கு செலவழிக்கும் தொகையை குறைத்திருக்கிறார்கள் அல்லது தேவையின் காரணமாக குறைந்திருக்கிறது. அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சம 7...