முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீங்கள் அறியாமலோ அறிந்தோ இந்து சனாதனத்தை கொண்டாடி கொண்டு தான் இருக்கிறீர்கள்..!

 காந்தாரா என்ற படம் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். நானும் சில  கட்டுரைகள் படித்தேன். படம் பார்க்க தயாரான போது இயக்குனரின் பேட்டியை பார்க்க நேர்ந்தது. கொஞ்சம் யோசித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பார்த்தேன். ரொம்பவே யோசித்தேன். நான் யோசித்தது போலவே பலரும் யோசிக்க தொடங்கினார்கள். இப்போது புரிய தொடங்கி இருக்கும் அது டெக்னிகலாக, மிக நேர்த்தியாக நம் தலைக்குள் ஊற்றப்பட்ட விஷம் என்பது. நிற்க. ஜெகன்மோகன்ரெட்டி எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு விசயம் சொன்னார் “ ஆர்.எஸ்.எஸின் ஆப்ரேஷன் திராவிடம் திட்டம் “ தென்னகத்தை இனி சீர்குலைக்கும். அதனை எதிர்க்க எல்லாரும் ஒன்றினைய வேண்டுமென்றார். பின்னாளில் அவரும் அதில் ஒரு கண்ணியானர்.  சந்திரசேகரரெட்டி கிட்டதட்ட இதே கருத்தை வேறு ஒருதொனியில் சொன்னார். தென்னிந்தியாவை பலி கொடுத்து அதன் பொருளாதார அரசியல் சுதந்திரங்களை திருடி வடக்கே வாழ வைக்க முயல்கிறார்கள் என்றார். கூர்ந்து அரசியலை கவனியுங்கள். காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் ஓரளவு இருக்கிறது. இது போக அங்கே ஒன்று அல்லது இரண்டு மாநில கட்சிகள் இருக்கும். பிஜேபி என்பதே கிடையாது பல மாநிலங்களில...