அது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “. தான். ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எரிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எரி.. உனக்கு ஒரு டாலர் தரேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக்கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அது ஒரு நிகழ்ச்சி... தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். அதன் நவீன வடிவம் தான் பிக்பாஸ். அதில் பங்கேற்கும் பலரும் ஒரு விதத்தில் “செலிபிரேட்டி பைத்தியங்கள் “ கூடவே அதுக்கு கொஞ்சம் காசும் கொடுக்கிறாங்க என்பதுதான். பார்க்கும் மக்கள் எல்லாரும் முட்டாளாக்கிவிடலாம் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம்.ஆனால் அதனை நிஜமென நம்ப வைப்பார்கள். அதில் பேசப்படும் எல்லாமே சமூக கழிவுகளின்...