முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவை தானா இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்..? சமூக பார்வையில்

 இந்தியாவும் - ஹேப்பி ஸ்ட்ரீட்டும் : இந்தியா என்பது ஒரு சாதி சமூகம். பிறகு மத சமூகம். இங்கே சாதி தான் பிரதானம். சாதியை காக்கதான் இங்கே மதம் இருக்கிறது. மதம் காக்க கடவுள் இருப்பதாய் நம்புகிறார்கள். இந்த தேசத்தின் அடிப்படை சாதி பிறகு மதம். மனிதன் மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம் தான்.  அப்படியான ஒரு மூட தேசத்தில் கொண்டாட்டங்கள் எதன் அடிப்படையில் இருக்கும் ? சாதியின் அடிப்படையில். மதத்தின் அடிப்படையில். இரண்டுமே முட்டாள்தன அடிப்படையிலும், மூடத்தன கூறுகளாலும் நிறைந்திருக்கும். அங்கே மனிதராய் இணைய வாய்ப்பில்லை. சாதியாய் இணையலாம். மதமாய் இணையலாம். ஒவ்வொரு ஊரியிலும் அரசின் ஆலயங்கள் இருக்கும். தனியார் ஆலயங்கள் இருக்கும். அரசு ஆலய கொண்டாடங்களில் அதிகாரம் ( பணம், அரசியல், சாதி ) மட்டுமே முக்கியத்துவம் பெறும். தனியார் ஆலயங்களில் சொல்லவே வேண்டாம் சாதிதான் கொண்டாட்டத்தில் முதன்மை பெறும். பக்தி என்ற பெயரில், வழிபாடு என்ற பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். அவ்ளோதான். அதில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இதே தான் ஊர்த்திருவிழாவிலும்.  தெருக்கட்டு பொங்கல் என கொண்டாடுவதும் பெரும்பாலும் ஒரே சாதிக்...