முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர் வாழ்வியலில் மா(ம)தம் உணர்த்தும் உன்னத செய்தி?

தை மாத முடிவில் இருக்கிறோம். அடுத்து மாசி, பங்குனி என முக்கியமான மாதங்கள் தமிழர்களுக்கு. ஆம்.  குலதெய்வ வழிபாடு இந்த மாதங்களில் மேலோங்கி நிற்கும். அய்யானாரில் தொடங்கி கருப்பசாமி, பேராத்து அம்மன், சுடலை மாடன், இருளாயி, கருப்பண்ணசாமி, செண்பகத்தாயம்மாள், சொறிமுத்து அய்யனார், பெரிய கருப்பன்.... என நீளும் பட்டியல் அது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கூடிக்கொண்டாடி பகிர்ந்து பிரிதலே இந்த வழிபாட்டில் நோக்கமாக இருக்கும்.  வாழ்ந்துபோன ஒருவருக்கு நன்றி கூறும் இடமாகவே அது பார்க்கப்படும். பெரும்பாலும் வயக்காட்டு நிலங்களிலும், ஆத்தோர படுகைகளிலும், ஊருக்கு வெளியே வெட்ட வெளிகளிலும் வழிபாட்டு கூடுகைகள் இருக்கும். பெரிய கலையம்சத்தோடு எல்லாம் இருக்காது அந்த ஆலயங்கள். சக மனிதரை போலவே அந்த தெய்வங்கள் நிற்கும். அதன் வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பவரும் அந்த குடும்ப சொந்தங்களை சேர்ந்த ஒருவர் மட்டுமே. அவரே காப்புகட்டி அந்த வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பார்.  பிறகு தலைக்கட்டுகள் ( ஒருவனுக்கு திருமணமாகி தனியாக வரிகட்டினால் அவர் தலைக்கட்டு) அமர்ந்து பேசுவார்கள் .அடுத்தாண்டு இந்த மாதிரி செய்யணும் இதையெல்...