தை மாத முடிவில் இருக்கிறோம். அடுத்து மாசி, பங்குனி என முக்கியமான மாதங்கள் தமிழர்களுக்கு. ஆம்.
குலதெய்வ வழிபாடு இந்த மாதங்களில் மேலோங்கி நிற்கும். அய்யானாரில் தொடங்கி கருப்பசாமி, பேராத்து அம்மன், சுடலை மாடன், இருளாயி, கருப்பண்ணசாமி, செண்பகத்தாயம்மாள், சொறிமுத்து அய்யனார், பெரிய கருப்பன்.... என நீளும் பட்டியல் அது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கூடிக்கொண்டாடி பகிர்ந்து பிரிதலே இந்த வழிபாட்டில் நோக்கமாக இருக்கும்.
வாழ்ந்துபோன ஒருவருக்கு நன்றி கூறும் இடமாகவே அது பார்க்கப்படும்.
பெரும்பாலும் வயக்காட்டு நிலங்களிலும், ஆத்தோர படுகைகளிலும், ஊருக்கு வெளியே வெட்ட வெளிகளிலும் வழிபாட்டு கூடுகைகள் இருக்கும். பெரிய கலையம்சத்தோடு எல்லாம் இருக்காது அந்த ஆலயங்கள். சக மனிதரை போலவே அந்த தெய்வங்கள் நிற்கும். அதன் வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பவரும் அந்த குடும்ப சொந்தங்களை சேர்ந்த ஒருவர் மட்டுமே. அவரே காப்புகட்டி அந்த வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பார்.
பிறகு தலைக்கட்டுகள் ( ஒருவனுக்கு திருமணமாகி தனியாக வரிகட்டினால் அவர் தலைக்கட்டு) அமர்ந்து பேசுவார்கள் .அடுத்தாண்டு இந்த மாதிரி செய்யணும் இதையெல்லாம் தேவையா இருக்கு.. நம்ம ஆளு ஒருத்தன் இப்படி செஞ்சுட்டானு பேசி பகிர்ந்துகொண்டு.. ஊர் திரும்புவார்கள். எந்த ஒரு இடத்தில் புரியாத சமஸ்கிருதம் நுழையாது.
இப்போது வசதி வந்தவுடன் சில ஆலயங்களில் இந்த வைணவ மந்திர அய்யர்களை அழைத்து செய்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரளவுக்கு மட்டுமே. ஒரு எல்லை தாண்டி அவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை.
இதிலிருந்தே நீங்கள் தெளிவாக உணரலாம்... தமிழர்கள் மதம் இந்து அல்ல. வழிபாடு இந்து அல்ல. நூற்றுக்கு 98 பேர் தமிழர்களுக்கு குலதெய்வம் மேற்கூறியவற்றில் தான் இருக்கும். சில தப்பி இருக்கும். அதுவும் உறவுசங்கிலிகளில் பகிரப்படாமையால் விட்டுபோயிருக்கும். இது தான் முக்கியம்.
சமீபத்தில் வெளியாகும் ஒரு பக்தி நாளிதழிலும் குலதெய்வ வழிபாட்டுக்குளுக்கு உரிய மந்திரங்கள் என்ற கட்டுரை இடம்பெற்று இருந்தது. இந்தியர்களின் கலை, வழிபாடு, இலக்கியம் என எல்லாமே தமிழர்களின் தொன்மங்களில் இருந்து திருடப்பட்டது. இப்போது குலதெய்வம் என்பதையும் திருடப்பார்க்கிறார்கள். அல்லது அதிலிருந்து ஏதும் வருமானம் கிடைக்க முடியுமா என பார்க்கிறார்கள்.
தமிழர்களின் வழிபாட்டில் நீர் முக்கிய பங்கு வகிக்கும். இவர்களுக்கு சுத்தப்படுத்துதல் என்பதே நீரை ஊற்றி நன்றி தெரிவித்தலே.. ஆனால் ஆர்ய வழிபாட்டில் நெருப்பில் சுடுதல் என்பதே சுத்தப்படுத்தும் முறை. நெருப்பில் ஆட்டை தூக்கி எறிதல் மாடை தூக்கி எறிதல், துணிகளை போடுதல் மரங்களை போடுதல் என நீளும். அது கடைசியில் சீதையை தூக்கி போடுவதில் வந்து முடியும். ஆனால் தமிழர் வழிபாட்டில் நீர் மட்டுமே பிரதானம்.
அடுத்த முக்கியமான விடயம் அந்த குடியின் மூத்தோனே வழிபாட்டை முன்னெடுப்பவன். இன்றும் சில இடங்களில் குறிப்பாக அய்யாவழி வழிபாட்டில் யார் மண்டபத்தில் மூத்தோரே அவரே தாலியெடுத்து கொடுப்பார். (இப்போது இங்கும் மாற்றம் வந்துவிட்டது. யாரோ சிலர் வந்து எடுத்துக்கொடுக்கிறார்கள்).
தலித் மக்களில் பெரும்பாலானோர் இன்றும் தங்கள் திருமணத்தை வெட்ட வெளியில் சூரியன் முன்னிலையில் நடத்துகிறார்கள். அங்கும் வைணவ மந்திரங்களுகு இடமில்லை. ஒரு மூத்தோன் கேட்கிறார்.. எல்லாம் பேசியாச்சுல்ல.. இனி தாலி கட்டிரலாம்ல.. இந்தா.. நம்ம ஆறுமுகம் பெரிய ஆத்தாவ கூப்டு... தாலி எடுத்துகொடுக்கட்டும்... எல்லாரும் சாப்டுதான் போகணும் என திருமணம் முடிந்து போகும்.
இன்று குலதெய்வ ஆலயங்களில் யாரோ ஸ்பான்சர் செய்ய விநாயகரும், லட்சுமியும் வருகிறார்கள். அவர்கள் இருக்கிறார்கள் என வழிபாட்டு முறையில் மாற்றம் கோருகிறார்கள். அசைவம் வேண்டாம், அது வேண்டாம், இது வேண்டாமென நம் வழிபாட்டை திருடபார்க்கிறார்கள். நாம் தான் உசாராக இருக்க வேண்டும். இந்த மூடர்களிடம் இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் காத்துக்கொள்ள.
இந்த ஜீயர்களும் சில எச்சைகளும் பேசும் வெறிபிடித்த இந்துத்துவா நமக்கு தேவையே இல்லை. காரணம் அது இறக்குமதி. நமக்கு மண்சார்ந்து வாழ்வியல் சூழ் வழிபாடு இருக்கிறது. நம் கடவுள்கள் பெண்களின் ஆடைகளை திருடி கைகளை உயர்த்தியபடி மேலே வர சொல்பவர் இல்லை.
நம் முன்னொர்களின் மனைவிகள் எல்லாம் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டவரும் இல்லை. நம் கடவுள் பரிகாரம், பூஜை என கையூட்டு கேட்பவரும் இல்லை. அவர் இயற்கையோடு இருப்பார்.. நம்மையும் இருக்க சொல்லுவார்.
குலதெய்வத்தை முன் வையுங்கள். இறக்குமதி கடவுளையும் அவரின் பரிகாரங்களையும் மந்திரங்களையும் புறந்தள்ளுங்கள். வாழ்வில் பெரும் நேரம் உங்களுக்கு கிடைக்கும். அதைவிட முக்கியம் உங்கள் நீளமான தொன்மையும் புரியும்
கருத்துகள்
கருத்துரையிடுக