யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!
"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது. நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்... இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும். உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும். சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும். நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக...