முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!

"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது.



நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்... 

இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும். 

உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும். 

சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும்.


நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக்கு இதெல்லாம் புடிச்சிருக்கு அதனால செய்றேன். என் வீட்ல இதெல்லாம் எனக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க. அதுனால இந்த மாதிரி நான் செய்றேன். வேறு ஒருத்தனுக்கு வேற ஒன்னுல பயிற்சி கொடுத்திருக்காங்க.. அவன் அப்டி செய்றான்.

நான் படிச்சத வச்சு வாழ்வை இப்படி புரிஞ்சு வாழ்றேன்.. அவன் அவன்படிச்சதை வச்சு அவன் புரிஞ்சபடி வாழ்றான். இவ்ளோதான் வாழ்க்கைனு நம்பிட்டா போதும்.இந்த நல்லங்கிற சர்டிபிகேட் விட்டு வெளியே வந்திடலாம்.

நல்ல யோசிச்சா இந்த சர்டிபிகேட் கையில வச்சிருக்கவன் எல்லாம் ஒரு ஆள்பிடிக்கிற புரோக்கர் தான். இதெல்லாம் நல்லது வெளிப்படையா சொல்லுங்க ஒரு குரூப் வந்து கூப்டு போகும். அதெல்லாம் நல்லதுனு சொன்னா இன்னொரு க்ரூப். இவ்ளோதான் இங்க. 

நீங்க கூட்டமா வாழ முயற்சி செய்ங்க. கும்பல்ல இருக்க முயற்சி செய்யாதீங்க. கூட்டமா வாழ நிறைய வாழனும்.. கும்பலா வாழ எதுவுமே தேவையில்லை. 

நிறைய வாழ, அல்ரெடி வாழ்ந்துட்டு இருக்கிற கொஞ்சம் திருப்பி பாருங்க. எதெல்லாம் சுய தேடல், எதெல்லாம் திணிப்புனு... நிறைய புரியும். அந்த புரிதல் படி வாழுங்க.. அது போதும்


*பி.கு : இது ஒரு "நல்ல" பதிவாக இருக்க வேண்டும் என நான் எண்ணி பதிவு செய்யவில்லை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...