சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாம...