சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது.
இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாமர் சிவாஜி வெளியே வந்திருப்பார். கமலுக்கு அப்படி மொத்த படமும் இல்லையென்றாலும் சில படங்களில் சில காட்சிகள் உண்டு. உதாரணம் தேவர்மகன் சிவாஜியுடனான அவரின் வெளிப்பாடுகள்.
நடிகன் சொல்லிகொடுத்ததை சரியாக கேமரா பார்த்து லெனஸ் பார்த்து ப்ரேமில் இங்கே இருப்போம் என புரிந்து மீட்டர் தெரிந்து வெளிப்படுவார்.
பெர்ஃபாமர் இவையெல்லாம் தெரிந்திருக்க அவசியமில்லை. அந்த கதாபாரத்திற்கு ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் அதன் உடல்மொழியை உள்வாங்கி இயல்பாக வெளிப்படுவார்கள்.
நடிகர்களை நடிகருக்கு என உருவாக்கப்பட்ட பிம்பம் பிண்ணனி இசை சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கும். ஆனா இந்த எம்.ஆர் ராதா, எம்.எஸ்.பாஸ்கர் ,சில படங்களில் ரகுவரன் சில படங்களில் பத்மினி இவர்கள் எல்லாம் நடிகர்கள் தாண்டி பெர்ஃபாமராக மின்னுவார்கள். இன்னும் பெரிய லிஸ்ட் உண்டு.
உதாரணமாக, உத்தமவில்லனில், எம்.எஸ்.பாஸ்கர் வாழ்ந்திருப்பார். அப்புச்சி என அவர் பேசும் வசனம் கமல்ஹாசனால் கூட செய்ய முடியாது. விஜய்சேதுபதி 96 படத்தில் நடிகர் என்பதை தாண்டி ஒரு பெர்ஃபாமராக மின்னுவார். தனுஷ் வடசென்னை படத்தில் அன்பு பாத்திரத்தில் அப்படி இருப்பார். புஷ்பா படத்தில் கடைசியில் வரும் பகத்ஃபாசில் மிரட்டிவிட்டு செல்வார். காரணம் அவர் நடிகர் இல்லை பெர்ஃபாமர்.
நடிப்பு என்பது வேஷம் போடுவது, முகத்தை மாற்றுவது என்பதெல்லாம் தாண்டி அது வேறு ஒன்று. இந்த புரிதலில் நாம் படங்களை பார்க்க தொடங்கும் போது நம்மால் நல்ல படங்களை உள்வாங்க முடியும். அதைவிட்டு 10 வேசம், ஒரே பிரேமில் கதை சொல்றோம், உடம்பு 15கிலோ ஏத்தியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே. ரஜினியிடமே போய் நீங்க நடிச்ச படம்னு கேட்டா முள்ளும்மலரும் மட்டுந்தான் சொல்ல முடியும். ஏன்னா அதுல அவர் பெர்ஃபாமரா கொஞ்சம் எட்டிப்பார்த்த படம்.
ஏன்னா பான் இந்தியா படம்ங்கிற பேர்ல பிரம்மாண்ட செட் நாலு மொழி நடிகர்களை தூக்கி போட்டு அவியல் சினிமா வரும் காலத்தில் இந்த பெர்ஃபாமர்கள் காணமல் போவார்கள். ஏனெனில் அங்கே வசனம் போதுமென்ற தன்மையும், பெரிய நடிகர் வேல்யூவும் போதுமென உருவாகும். விளைவு நல்ல சினிமா இழக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே அது கொஞ்சம் தான் வருது.
நடிகர்களை கொண்டாடுங்கள். பெர்ஃபாமர்களையும் கவனித்து கொண்டாடுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக