தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும். அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும். என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம். ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது. ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என ப...