தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும்.
அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும்.
என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம்.
ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது.
ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என பதட்டம் கொள்கிறோம். உடனே கொன்றவர்களே ஒரு நாடகம் ஆடி, இதோ பாருங்க இவன் தான் பாருங்க என சொல்லி நம் கண் முன்னே அவனை கொன்றுவிடுகிறார்கள். நாமும் சமாதானம் ஆகிறோம். ஆனால் உண்மை காரணம் வேறொன்றாக இருக்கிறது.
இதோ சமீபத்தில் ஒரு மாணவி பள்ளியில் இறந்து போகிறாள். அதன் விசாரணையில் கவனம் செலுத்தாமல் நாம் உடனே பொது புத்தியோடு அவரை கைது செய், இவரை கைது செய் என பதிய ஆரம்பித்தோம். பதட்டப்பட ஆரம்பித்தோம். விளைவு அவர்களே ஒரு நாடகம் ஆடத் தொடங்கிவிட்டர்கள்.
நமது அவசரத்தை அவர்கள் அழகாக பயன்படுத்திக்கொண்டார்கள். நாம் என்ன செய்திருக்க வேண்டும் ? மத்தியரசின் ஜிப்மர் வேண்டாம் அரசு மருத்துவமனை என நகர்ந்திருக்க வேண்டும். மாநில அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
நான்கு நாட்கள் அமைதியாக இருந்தோமே... என்றால், நாலு நாள்ள இங்க கோரிக்கை கூட அரசு காதுக்கு போயிருக்காது. அதான் நிஜம். அதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சு இப்ப வழக்கு முழுக்க முழுக்க நீதிமன்றமே நகர்த்தி செல்கிறது.
நாங்க சொல்ற டாக்டர்
நாங்க சொல்றோம் எரிச்சுடு
நாங்க சொல்றோம் கூட்டம் கூடாதேனு... என யாரோ வழிநடத்துகிறார்கள்.
இதான் நடக்குது. கண்டிப்பா இதுல நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. ஏன்னா நம்ம சிஸ்டம் அப்படி. ஆட்சியாளர்கள் அப்படி. எதிர்கட்சியா இருக்கும் போது ஓடிய பல கால்கள் இப்போது அமைதியாக இருக்க காரணம் அதிகாரம். முன்னால் வெறும் மனிதர்கள், இப்போது அதிகாரம். இந்த அதிகாரத்தோடு போனால் நாம் என்ன கேட்போம் ? இங்க வந்து என்ன செய்ய போறே.. போய் கொலைகாரனை தூக்கில போடுனு சொல்லுவோம் வரலனா என்ன சொல்லுவோம்... எட்டிக்கூட பார்க்கலனு சொல்லுவோம். அவன் என்ன செய்றான் அரசு நடவடிக்கை எடுக்கும்னு பதுங்கிகிறான்.
நம்முடைய அவசரமே கட்சிகளின் அதிகாரங்களில் பதுங்கு குழி ஆகிறது. எது ஒன்றையாவது ஆக்கப்பூர்வமாய் நிதானமாய் யோசித்து அதன் நோக்கத்தை நோக்கி நகர்த்தி வெற்றி பெற்றிருக்கோமா ? அதற்கான காலத்தை கொடுத்திருக்கிறோமா ?
காந்தி ஏன் அமைதியா போராடினார் என்றால்,அந்த செவிட்டு அதிகாரத்திடம் பேசினால் கேட்க நாளாகும். கேட்க நாளாகிறது என அடிக்க தொடங்கினால் அது உங்கள் வாயை மூடிவிட்டு வேறு ஒரு பட்டம் கொடுத்து முடக்கிவிடும்.அதுதான் சுதந்திர இந்தியாவில் நடந்துகொண்டே இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக