இயல்பாகவே நமக்கு தற்பெருமை அதிகம். ஒரு காலத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி என்றே படங்கள் வரும். அது மக்களுக்கு அறிவினை கொடுத்தது. இன்று மன்னராட்சி எப்படி இருந்தது தெரியுமா என கிராபிக்ஸ் படங்களை கொடுத்து முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குழுவை வழி நடத்தினார்கள். பாகுபலி படத்தில் வசனம் வருமே “ நூறடி சிலை சில நூறு பேரையாவது பலிவாங்காதா “ என்ற வசனமே மன்னர்கள் வசனம். ஒருவேளை பாகுபலி மன்னராக வந்தால் அவன் பல்வாள் தேவன் போல தன் சிலையை வைக்கமால் இருப்பான், ஆனால் கோவில் கட்டுகிறேன் பலிகொடுப்பான். இதுதான் மன்னர்கள் ஆட்சி நிலை. சிலப்பதிகாரத்தில் ஒரு வியாபாரியின் மகன் திருமணத்தில் மன்னர் மூன்று நாட்கள் அமர்ந்திருப்பார். அப்பவே கார்ப்ரேட் அடிமைகள் தான் போல மன்னர்கள். எழுதியது சமணம் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனிய வாடை கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களை தீ எரிக்கலாம் என கோவலன் மிசஸ் சாபம் கொடுப்பார்கள். அதிலும் தமிழ்நாட்டு மன்னர்கள் கொஞ்சம் காமெடி பீஸ் தான். வடதிராவிட மன்னர்ககளுக்கு வெளியில் இருந்து ஊடுருவல் நடந்தபடியே இருந்தது. அவர்கள் எதிர்...