இயல்பாகவே நமக்கு தற்பெருமை அதிகம். ஒரு காலத்தில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி என்றே படங்கள் வரும். அது மக்களுக்கு அறிவினை கொடுத்தது. இன்று மன்னராட்சி எப்படி இருந்தது தெரியுமா என கிராபிக்ஸ் படங்களை கொடுத்து முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை குழுவை வழி நடத்தினார்கள். பாகுபலி படத்தில் வசனம் வருமே “ நூறடி சிலை சில நூறு பேரையாவது பலிவாங்காதா “ என்ற வசனமே மன்னர்கள் வசனம். ஒருவேளை பாகுபலி மன்னராக வந்தால் அவன் பல்வாள் தேவன் போல தன் சிலையை வைக்கமால் இருப்பான், ஆனால் கோவில் கட்டுகிறேன் பலிகொடுப்பான். இதுதான் மன்னர்கள் ஆட்சி நிலை.
சிலப்பதிகாரத்தில் ஒரு வியாபாரியின் மகன் திருமணத்தில் மன்னர் மூன்று நாட்கள் அமர்ந்திருப்பார். அப்பவே கார்ப்ரேட் அடிமைகள் தான் போல மன்னர்கள். எழுதியது சமணம் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனிய வாடை கொஞ்சம் கம்மியாக இருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களை தீ எரிக்கலாம் என கோவலன் மிசஸ் சாபம் கொடுப்பார்கள்.
அதிலும் தமிழ்நாட்டு மன்னர்கள் கொஞ்சம் காமெடி பீஸ் தான். வடதிராவிட மன்னர்ககளுக்கு வெளியில் இருந்து ஊடுருவல் நடந்தபடியே இருந்தது. அவர்கள் எதிர்த்து சண்டையிட்ட ஊடுருவல் மன்னர்கள் அதிகம். ஆனால் இங்கே கதையே வேற. கொன்னது பூரா ஒரே மொழி மக்கள் தான். சோழனுக்கு பாண்டியன் ஆகாது, பாண்டியனுக்கு சோழன் ஆகாது. இவனுக்கு ரெண்டு பேருக்கும் சிறுசிறுமன்னர்கள் ஆகாது. கூடவே பழங்குடியினரை அவர்கள் தம் ஆட்சியாளர்களை கொன்ற கதையெல்லாம் மிஷனரிகள் கூட செய்யாத கொடூரங்கள்.
வீரதீர சோழன் தன் அண்ணனை கொன்றவர்கள் முன் மண்டியிட்டு ஊரைவிட்டு அனுப்பிய வரலாறு இன்றும் கல்வெட்டுதான். வேண்டுமானால் ஊரைவிட்டு வெளியே அனுப்புவது பெரிய தண்டனை என மோடி போல வடைசுடலாம். ஆனால் நிஜம் பார்ப்பனிய மனு அடிமைதனமே. குடவோலை முறையிலும் எல்லாருக்கும் வாக்கு இல்லை. அங்கேயும் வர்ணாசிரம தர்மம் தான்.
தஞ்சை பெரிய கோவில் பெரிய கட்டிட கலைதான். இந்தியளவில் அது இன்று வரையிலும் ஆச்சர்யம் தான். ஆனால் அது பாண்டியர்களை சுரண்டி அடிமையாக்கி கட்டிய ஒன்றுதான். சோழத் தமிழர்களை தெலுங்க நாயக்கர்களோடு சேர்ந்து பின்னர் வந்த பாண்டிய தமிழர்கள் அழித்தார்கள். பிறகு அந்த இன்று உலகமோ கொண்டாடும் ஆலயத்தை, தமிழர்களின் பொக்கிஷத்தை மூடிவிட்டு சென்றார்கள். பாண்டியர்கள் ஆட்சிகாலம் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் நாயக்கர் ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளப்பட்டது.
பிற்கால பாண்டியர்கள், சோழர்கள் எல்லாருமே பார்ப்பனிய அடிமைகள்தான். இதில் இவர் அதிகம் அவர் குறைவு என்றுவேண்டுமானல் சொல்லலாம். மற்றபடி எல்லாம் அடிமைகள் தான். பெரும்பாலான மக்களை வதைத்துக்கொண்டு, சிலரை மட்டும் அண்டி அனுசரித்து வாழ்ந்தவர்கள் தான் நீங்கள் கிராபிக்சில் பார்த்து கைதட்டும் மன்னர்கள். தன் கனவு ஆலயத்தை உருவாக்க சுங்கவரியை கொண்டுவந்தார்கள். இப்போதும் நாம் டோல்கேட் என கட்டிக்கொண்டிருக்கிறோம். மன்னராட்சியின் நீட்சியான ஜமின் ஆட்சியில் கூட, விவேகானந்தர் அமெரிக்கா சென்று இந்து மதம் பற்றி பெருமை பேச பணம் கொடுத்தவர்கள், உள்ளூரில் தன் மக்களே கோவிலுக்கு வந்தால் விரட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் மன்னர் பரம்பரை தான். இதுதான் மன்னர்கள் வரலாறு,
இன்று நீங்கள் வாழும் வாழ்வு உங்கள் தாத்தாவின் கனவு வாழ்க்கை. அதனை கொடுத்தது ஜனநாயகமே. மன்னராட்சி இல்லை. மன்னாட்சியில் ஒரு வில்லு வண்டி வாங்க, வீட்டில் ஜன்னல் வைக்க, முற்றம் வைக்க எல்லாம் நீங்கள் மன்னரிடம் மண்டியிட்டு கேட்க வேண்டும். மன்னர் பார்ப்பனர்களிடம் கேட்பார். இதுதான் நிஜம்.
மன்னர்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பொய்யாக கொண்டாடாதீர்கள். காரணம் மன்னர்கள் வரலாறு என்பது ஜெயாவின் புகழ்பாடிய நமது எம்ஜியார், மோடியின் புகழ் பாடும் விஜயபாரதம், ஸ்டாலினின் புகழ் பாடும் முரசொலி வகையறாதான். வரலாறு வேறு.
கருத்துகள்
கருத்துரையிடுக