மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் : இப்ப வரைக்கு யார் இணைக்கணும், எப்படி இணைக்கனும்னு விபரங்கள் வருதே தவிர ஏன் இணைக்கணும் தெரியல. மின் இணைப்புல எதுக்கு ஆதாருனு கேட்டா நெறிப்படுத்த என சொல்கிறார்கள். அப்படியெனில் இதுவரை நெறிப்படுத்தவில்லையா ? ஆதார் முலம் மட்டுமே நெறிப்படுத்த முடியுமா ? ஆதார் என்பதே தோற்றுபோன ஒன்றாக அல்லது தரவுகளை விற்கும் ஒன்றாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் தேர்தல் அடையாள அட்டையுடன் இணை, மின் இணைப்புடன் இணை என்பதெல்லாம் பணமதிப்பிழப்பில் வீதியில் நிறுத்தியது போலவே இருக்கிறது. மத்தி(ஒன்றி)ய அரசின் முட்டாள்தனங்களை எதிர்ப்பார்கள் என்றே திமுகவை நம்பினார்கள். ஆனால் இவர்களோ ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே பின் தொடர்கிறார்கள். ஒரு முணுமுணுப்பு கூட ஆளுங்கட்சியிடம் இல்லை. நீட், ரம்மி, என மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுகிறார், அது ஒன்றிய அரசின் சதியெனில், ஒன்றிய அரசின் ஆதார் இணைப்பை வாக்காளார் அடையாள அட்டை, மின் இணைப்பு என சிரம் மேற்கொண்டு பணி செய்வது யாரின் சதி ? எரிவாயு மானியம் இல்லாமல் போனது எல்லாரும் அறிவார்கள். டோ...