முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே நாடு ஒரே ஆதாரு...அதுக்கு இணை இதுக்கும் இணை என்ன நடக்கிறது..?

 


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் : 

இப்ப வரைக்கு யார் இணைக்கணும், எப்படி இணைக்கனும்னு விபரங்கள் வருதே தவிர ஏன் இணைக்கணும் தெரியல.

மின் இணைப்புல எதுக்கு ஆதாருனு கேட்டா நெறிப்படுத்த என சொல்கிறார்கள். அப்படியெனில் இதுவரை நெறிப்படுத்தவில்லையா ? ஆதார் முலம் மட்டுமே நெறிப்படுத்த முடியுமா ?

ஆதார் என்பதே தோற்றுபோன ஒன்றாக அல்லது தரவுகளை விற்கும் ஒன்றாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் தேர்தல் அடையாள அட்டையுடன் இணை, மின் இணைப்புடன் இணை என்பதெல்லாம் பணமதிப்பிழப்பில் வீதியில் நிறுத்தியது போலவே இருக்கிறது.

மத்தி(ஒன்றி)ய அரசின் முட்டாள்தனங்களை எதிர்ப்பார்கள் என்றே திமுகவை நம்பினார்கள். ஆனால் இவர்களோ ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே பின் தொடர்கிறார்கள். ஒரு முணுமுணுப்பு கூட ஆளுங்கட்சியிடம் இல்லை. 

நீட், ரம்மி, என மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுகிறார், அது  ஒன்றிய அரசின் சதியெனில்,

ஒன்றிய அரசின் ஆதார் இணைப்பை வாக்காளார் அடையாள அட்டை, மின் இணைப்பு என  சிரம் மேற்கொண்டு பணி செய்வது யாரின் சதி ?

எரிவாயு மானியம் இல்லாமல் போனது எல்லாரும் அறிவார்கள். டோல்கேட் வரி  எவ்வளவு உயந்திருக்கிறது என மறந்தே போனது. 

இது போலத்தான் மின் இணைப்புக்கும் ஆக போகிறது. மானியம் இல்லாமல் போக போகிறது. அதற்கும் ஒர் சப்பை கட்டு காரணங்கள் சொல்ல போகிறார்கள்.

திமுகவிற்கு ஒரே ஒரு நினைவூட்டல் தான். பிஜேபி எதிர்ப்பில் தான் உங்களை ஆட்சியில் அமரவைத்தார்கள். இப்படியே நீடித்தால் அதாவது நீங்கள் பிஜேபிக்கு செய்யும் சேவைகள் தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களே வரட்டுமென மக்கள் முடிவெடுப்பார்கள். காரணம் களத்தில் இப்போது இருப்பதாக காட்டப்படுவது திமுக எதிர் பிஜேபி என்ற நிலை தான்.

நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மருத்துவக் கனவை யார் காணலாம்..? NEETன் சித்திரம்

தமிழ்நாட்டில் “பிளைண்ட்” பாலிடிக்ஸ் அதிகம். தனக்கு பிடித்தவர் சொல்கிறார் அதுதான் வேதவாக்கு என நம்பி பேசி அலையும் அரசியல். நீட் தேர்வு : நீட் தேர்வால் ஊழல் ஒழிப்பு, ஏழைகள் படிக்கலாம், கல்லூரிகளில் லஞ்சம் வாங்க முடியாது என உருட்டுவார்கள். கொஞ்சம் நெருங்கி அடுத்தடுத்து கேள்வி கேட்டால் தப்பி ஓடுவார்கள் இந்த மூடர்கள். நாம் கொஞ்சம் பேசிப்பார்ப்போம். நீட் தேர்வும், ஐ.ஏ.எஸ் தேர்வும் ஒன்றா ? இல்லை. ஐஏஎஸ் தேர்வு வேலைக்கானது. நீட் தேர்வு படிப்புக்கானது. சரி. நீட் தேர்வும் ஜேஇஇ தேர்வும் ஒன்றா ? அதுவும் இல்லை. ஜேஇஇ என்பது குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே சேருவேன், அதுதான் தகுதி, தரம், எனக்கான வாய்ப்பு என்பவர்களுக்கான தேர்வு. அதுவும் நீட்டும் ஒன்றல்ல. எனில் நீட் யாருக்கு ? நீட் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்பவர்களுக்கான தேர்வு. இந்தியாவில் உள்ள மருத்துவம் படிக்க விரும்பும் எவரும் இந்த தேர்வை எழுத வேண்டும். ஏன் எழுதினால் என்ன ? ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு படிப்பு இருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்ட படிப்புகள் இருக்கும் போது ஒரு படிப்பை அடிப்படையாக கொண்டு தேர்வு ...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...