அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள். சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய். ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை. இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை. இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்...