அஜித் ரசிகர் ஒருவர் இறந்து போயிருக்கிறார். உடனே பலரும் அறிவுரைகளை வாரி வழங்குகிறார்கள். உடனே தமிழ்நாட்டு ஆரிய கும்பல் ஒரு கொடி பிடிக்கிறது. இவர்கள் எல்லாம் இப்படி இருப்பதால் தான் வடக்கு மக்கள் இங்கே வருகிறார் என சைடு கேப்பில் தன் ஆரிய விசுவாசத்தை காட்டுகிறார்கள்.
சுயமூளையற்ற அறிவாளிகளே, இங்கே வடக்கன் வருவது தமிழன் வேலை பார்க்க மறுப்பதால் இல்லை. கூலி பிரச்சினை. இன்றைக்கும் சிவகாசி பட்டாசு ஆலையின் அடிப்படை ஊதியம் தெரியுமா ? ஒரு ஆபிசில் ஒரு பெண் வேலைக்கான அடிப்படை சம்பளம் 5000 ரூபாய். ஆண் வேலைக்கு 7500 ரூ. ஆனால் அதே ஊரில் டாய்லெட் வசதியுடன் வீட்டு வாடகையே 5,500. இது தமிழ்நாடு முழுக்க நிலவும் பிரச்சினை.
இங்கே நிலவுவது தமிழர்கள் வேலை செய்வது இல்லை என்ற பெரும் பொய்யான கருத்துருவாக்கம் தான். நான் சொல்கிறேன் இல்லை. அவர் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய அவன் தயாராக இருக்கிறான். ஆனால் சம்பளம் தான் முதல் பிரச்சினை.
இரண்டாவது பிரச்சினை விசுவாசம். சமீபத்தில் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர், வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார். கேட்ட போது அவர் சொன்ன காரணம் முதலாளி வரும் போது எழுந்து நிக்கவில்லையாம். பிரிண்டிங் சார்ந்த நிறுவனத்தில் அமர நேரம் கிடைப்பதே குறைவு. கிடைத்த நேரத்தில் அமர்ந்த அவருக்கு மரியாதை தெரியவில்லை என நீக்கிவிட்டார்கள். இவர்கள் எதிர்பார்பது விசுவாசம் என்ற கொத்தடிமைகளை.
காலம் வரும், வரும் வடக்கன்களின் மூர்க்கம் வரலாறு அறியும் ,ஏதோ ஒர் குடும்பத்தின் ஒட்டுமொத்த கழுத்தறுத்து கொல்லும் போது புரியும். தமிழ்நாட்டில் நடக்கும் பல பெரிய திருட்டுகளின் இன்பார்மர் இந்த வடக்கன்ஸ்தான்.
தமிழர்களின் வேலைத்திறன் எப்போதும் அதிகமானது. ஆனால் அது சுயமரியாதை எதிர்பார்க்கும். அதை கொடுக்க விடாமல் முதலாளித்துவமும், சனாதனமும் பார்த்துக்கொள்கிறது,
அப்புறம் இதுவரை தமிழ்நாட்டில், தியாகராஜர் காலம் முதல், இப்போது ஜிவிபிரகாஷ் காலம் வரை ரசிகர்கள் சண்டையில் ஒரு 50 பேர் இறந்திருப்பார்களா ?
ஆனால் உங்கள் பக்தி மூடத்தனத்தில் ? மத வெறியில் ? எத்தனை பேர் இறந்திருப்பார்கள். ரசிகர்கள் மட்டுமே மூடர்களா ? ஏழு லட்சம் ரூபாய் மாலை வாங்கிய அஜித் ரசிகர் முட்டாள் என்றால், அதே விலையில் பெருமாளுக்கு மாலை போட்டால், திருப்பதி கோவிலில் உண்டியலில் போட்டால், இல்லை அனுமாருக்கு வடை மாலை சாத்தியவர்கள் எல்லாம் அறிவின் உச்சமா ? இவனுக்காவது அஜித் வாழும் சாட்சி. ஆனால் கடவுள் எல்லாம் புராணா புருடாக்களில் மட்டுமே ?
ரசிகர்கள் செய்வது தவறு. ஆனால் அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது உங்கள் மதம் தான். உங்கள் கடவுள் தான். இன்னும் சில ஆண்டுகளில் அவன் அந்த மாயையில் இருந்து விடுபடுவான். ஆனால் உங்களின் இந்த மத பித்து ???
கருத்துகள்
கருத்துரையிடுக