முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள் யாரை ஏமாற்றுகிறீர்கள்..? எல்லா மதத்திற்கும் ஒரு கடவுள் தான்..!

 9 நாளே நானே நடந்துக்குவேனு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசின பையன்.. இப்ப ஊழியம் பத்தியும் தன்னோட ஞான அருள் பத்தியும் பேட்டி கொடுத்திருக்கான். சமூகம் இவனை ரொம்ப சீரியசா எடுத்துக்கல... ஊழியம்ங்கிற பேர்ல இப்ப நிறைய காமெடி எல்லாம் நடக்குது. நகையை போடு. டான்ஸை போடுனு அது ஒரு பக்கம் போகுது. அதுல இதுவும் ஒன்னுனு கடந்து போகுது.  ஆனா எனக்கென்னமோ இந்த பையனை பார்க்கும் போது பெரிய பெரிய மத உபன்யாசகர் மாதிரி தான் தெரிஞ்சது. இங்க எல்லா மத்தையும் சேர்த்து தான் சொல்றேன். மதப் பெரியவர்கள் பேசுற எல்லார் பேச்சிலயும் இருக்கும் அதே நாடகதன்மை தான் இவனோட பேச்சிலயும் இருந்துச்சு. ஒருவேளை கடவுள் இருந்தா... அவருக்கு ஒரு அபிசேஷ மொழியோ, இல்ல அவரோட பெருமைகளை பேச ஊழியங்களோ, அவருக்கும் மனிதர்களுகும் இடையில் மீடியட்டரோ வச்சிருக்க மாட்டார். இதெல்லாம் செஞ்சா பாவம் இவ்ளோ குறையும், அதெல்லாம் கொடுத்த ஸ்பெஷலா சொர்க்கம் போய்டலாம் கண்டிப்பா கடவுள் சொல்லமாட்டார். இவனுக கட்டுன கோவில் ( எல்லா மதமும் தான் ) இவனுக உருவாக்குன மொழி, இவனுக உருவாக்குன சடங்கு, இவனுக உருவாக்குன வழிபாட்டு முறைனு ஒரு நாடகமே நடத்திட்டு இருப்பானுங்க....

அது எப்படி இந்த வயசுல மன அழுத்தம்..? உடையும் உருட்டு நியாயமாயிது..!

பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க...  மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்).  அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள். கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....   கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன்.  உங்க பணம் மத...

அட்லிக்கு அபார காழ்ப்புணர்ச்சி தான் பிளஸா..? இல்ல விஜயின் ரசிகன் என்பதா..?

எஸ்பிமுத்துராமன், ராஜசேகர், பி வாசு, ஹரி... இந்த இயக்குனர்கள் எல்லாரும் வேறு வேறு கால கட்டம். ஆனால் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது இவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத ஹீரோயிச மேஜிக் படங்கள்.  இந்த கதையை இப்படி சொன்னா ஓடும்னு இவங்களுக்கு தெரியும். ஊட்டி வரை உறவு கதையை பட்டி டிங்கரிங் பார்த்தா அது நடிகன். பெரிய இடத்து பெண் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தா அது சகலகலா வல்லவன். மணிசித்திரதாளு பட்டி டிங்கரிங் பார்த்தா அது சந்திரமுகி. இப்படி இவர்கள் எடுத்த படங்களில் பெரும்பாலும் இப்படித்தான். தெய்வமகன், அன்பே வா இப்படி பல படங்கள் அப்படியே சுடப்பட்ட படங்கள் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.  அட்லி தன்னை அந்த வரிசையில் தான் சொல்கிறார். நான் வெற்றிமாறன்,மிஷ்கின், ரஞ்சித் டைப் இயக்குனர் இல்லை. ஹீரோயிச இயக்குனர் தான் என்கிறார். அவரின் முதல் படம் தவிர்த்த மற்ற படங்கள் எல்லாமே நல்ல கரம் மசாலா டைப் படங்கள் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.  ஆனால் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு காழ்ப்புணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று அவரின் தோ...