எஸ்பிமுத்துராமன், ராஜசேகர், பி வாசு, ஹரி... இந்த இயக்குனர்கள் எல்லாரும் வேறு வேறு கால கட்டம். ஆனால் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது இவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத ஹீரோயிச மேஜிக் படங்கள்.
இந்த கதையை இப்படி சொன்னா ஓடும்னு இவங்களுக்கு தெரியும். ஊட்டி வரை உறவு கதையை பட்டி டிங்கரிங் பார்த்தா அது நடிகன். பெரிய இடத்து பெண் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தா அது சகலகலா வல்லவன். மணிசித்திரதாளு பட்டி டிங்கரிங் பார்த்தா அது சந்திரமுகி. இப்படி இவர்கள் எடுத்த படங்களில் பெரும்பாலும் இப்படித்தான். தெய்வமகன், அன்பே வா இப்படி பல படங்கள் அப்படியே சுடப்பட்ட படங்கள் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.
அட்லி தன்னை அந்த வரிசையில் தான் சொல்கிறார். நான் வெற்றிமாறன்,மிஷ்கின், ரஞ்சித் டைப் இயக்குனர் இல்லை. ஹீரோயிச இயக்குனர் தான் என்கிறார். அவரின் முதல் படம் தவிர்த்த மற்ற படங்கள் எல்லாமே நல்ல கரம் மசாலா டைப் படங்கள் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு காழ்ப்புணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று அவரின் தோற்றம். இரண்டு அவர் ஒரு நடிகரின் ரசிகனாகவே தன்னை காட்டிக்கொள்கிறார். அது காரணமாக இருக்கலாம். அல்லது அவரின் பேச்சில் ஒரு அட்டிட்டியூட் தெரியும் அதுவாக இருக்கலாம். ஆனால் அவர் கல்லூரி காலத்தில் இருந்தே உருவகேலியின் சிக்கியவர் என தெரிகிறது. அதனால் கூட இருக்கலாம். எதுவாயினும் அவருக்கு வரும் கிண்டல் கொஞ்சம் அதிகம் தான்.
விக்ரம் படம் வெளியாகி இரண்டாண்டுகளில் அதே கதை போக்குடன் வந்த ஜெய்லர் படத்தை மெகா ஹிட்டாக்கிவிட்டு அட்லியிடம் வந்து நீ அந்த படம் இந்த படம் இன்ஸ்பிரேசன்ல எடுக்கிரேனு சொல்லிட்டு இருக்காங்க விமர்சகர்கள்.
சரி கதை நாட் எடுப்போம்.
பாட்ஷா படத்தில அநீதி கண்டு பொங்கி எழுந்த ரஜினி, ஒரு சுயபாதிப்புக்கு பிறகு எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில மீண்டும் பொங்கி எழும் சூழல்.
அப்டியே கொஞ்சம் பின்னாடி போவோம்.. சத்ரியன் படத்துக்கு வருவோம். தன்னோட சிறுவயசிலெ அநியாயம் கண்டு பொங்கி எழும் ஹீரோ தொடர்ந்து ஒரு காவல்துறை அதிகாரியாகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சுயபாதிப்பு ஏற்படுகிறது. எல்லாத்தையும் விட்டு விலகி ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில் மீண்டும் பொங்கி எழும் சூழல்.
அப்டியே கொஞ்சம் முன்னாடி வருவோம் விக்ரம் படத்துக்கு போவோம். தன்னோட கடமையில கண்ணும் கருத்துமா இருக்கிற ஒரு அதிகாரி அதனால சுயபாதிப்பு அடையிறாரு. எல்லாத்தையும் விட்டு விலகி ஒதுங்கி வாழ்றாரு. ஒரு கட்டத்தில் மீண்டும் பொங்கி எழும் சூழல். ( இது ரெண்டு விக்ரமுக்கும் பொறுந்தும் )
இப்படி தமிழ் சினிமாவுல ஆயிரம் கதை சொல்ல முடியும். காதல் கதைனு எடுத்துகிட்டாலே ஒரு ரெண்டாயிரம் படம் ஒரே பாதிப்புல சொல்ல முடியும்.
சினிமாவுல ரெண்டு டைப்ல தான் அதிக இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒன்று நேரிடையா மசாலா படம்னு எடுக்கிறவங்க. இன்னொருத்தவங்க அந்த மசாலாவை வெளியே தெரியாம பூசி மொழுகி படம் எடுக்கிறவங்க. மூணாவது எண்ட இப்படி ஒரு கதை இருக்கு அதை நா இப்படித்தான் சொல்லுவேனு வந்து படம் எடுத்து அது யாருக்கும் தெரியாம பார்த்துகிறவங்க. விதிவிலக்கு வெற்றிகள் உண்டு. அத விட்றலாம்.
விசுவாசம், அண்ணாத்த, பிகிலு, ஜவான் படமெல்லாம் போஸ்டர் பார்த்தாலே சரி உள்ள என்ன பேச போறாங்கனு தெரிஞ்சுடும். அத போராடிக்காம சொல்றாங்களாங்கிறது தான் நாம கொடுத்த காசுக்கு வேலை. நமக்கும் வேலை. அதைவிட்டுட்டு கதை புதுசா இல்லை, ஓவர் ஹீரோயிசம், மசாலா .... அப்டி இப்டினு சொன்னா... எடுத்தவனை விட அத பார்த்துட்டு அப்டி சொல்றவங்க தான் முட்டாள் என்பேன்.
எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ மசாலா இயக்குனர்களில் வரிசையில் அட்லிக்கு முக்கிய இடம் உண்டு. விமர்சனமா நாம சும்மா கதறிட்டு இருக்கலாம். ஆனால் அவன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காரு தட்ஸ் இட்
கருத்துகள்
கருத்துரையிடுக