பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க...
மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்).
அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள்.
கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....
கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன்.
உங்க பணம் மதம் சாதி அதிகாரம் வெற்றுப் பெருமைனு எல்லாத்தையும் அவங்க மேல தான் திணிக்கிறிங்க. எல்லாம் செஞ்சுட்டு நா அவங்களை எப்படி பார்த்துகிறேன் தெரியுமானு உங்களுக்கு நீங்களே பூ போட்டுகிறிங்க....
உண்மையில அந்தந்த வயசு ஈர்ப்பு தேடல் சார்புனு இருக்கும். நீங்க எல்லாரும் அத தாண்டிதான் வந்திருப்பீங்க. நீங்க ஒரு பொம்பள புள்ளைய வெறிக்க வெறிக்க பார்க்கிறத வயசு இயல்பு கடந்திங்க. ஆன தற்போது வாட்சப்ல பேசுறது வாய்ச்சுருக்கு. தேடலும் ஈர்ப்பும் ஒன்னுதான். வெளிப்பாடுதான் வேறு, ஆனா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இந்த காலத்து பசங்கனு ராகம் பாடுரிங்க....
நீங்க ரஜினிக்கு பூ போட்டீங்க .. உங்க பையன் டிடிஎஃப் வாசனுக்கு பூ போடுறான். உங்களுக்கு நீங்க செய்தது நியாயம்ன உங்க பிள்ளைக்கும் அவன் செய்வதும் நியாயம். அவ்ளோதான்.
பேசுங்க. நாங்க இருக்கோம்னு பேசுங்க. என்ன ஆனாலும் வீட்டுக்கு வா நாம பார்த்துக்கலாம்னு சொல்லுங்க. அதுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் சரியா இருந்துகோங்க. உங்களோட பாதி பிரதிபலிப்பு தான் உங்க வாரிசுகள். அந்த பாதி சரியா இருந்தா சமூகம் கொடுக்கிற அழுத்தத்தை எதிர்கொள்ள முடியும்.
கொஞ்சம் அவங்களுக்குனு பெர்சனல் இடம் கொடுங்க. அந்த பெர்சனலை உங்கட்ட பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கொடுங்க. அந்த வாய்ப்பு கொடுக்க நீங்க அவங்க உலகத்தில இருக்கனும். குழந்தைகளை வளர்க்க முயற்சி செய்யாம கூட சேர்ந்து வளர முயற்சி செய்ங்க. அது போதும்...
கருத்துகள்
கருத்துரையிடுக