மனோஜ் : தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனரின் மகன். பாரதிராஜா படங்களில் சாதீயம் இருந்தாலும் தமிழகத்தின் கிராமங்களை கொஞ்சம் காட்டியவர் என்ற வகையில் அவர் படங்கள் தமிழ் சினிமாவின் புதியபாதை என சொல்ல முடியும். அவரை யொற்றி சிலர் அவரையும் தாண்டி சென்றார்கள். ஆனாலும் அவரின் பாதை தனிப்பாதைதான். மனோஜ். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக உச்சம் தொட வேண்டியவர். அவரின் முகம் இயல்பாகவே குற்ற உணர்ச்சி கதாபாத்திரத்திற்கு அப்டியே பொறுந்தி போகும் தன்மையுள்ளது. பல படங்களில் மனோஜ் நடித்திருந்தாலும் அல்லி அர்ஜூனா, கடல் பூக்கள் அவர் பயணத்தில் முக்கியமானது. இரண்டு படங்களில் இறுதிக்காட்சியில் அவர் அந்த கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோல்வியை கொண்டு வந்திருப்பார். ஆனால் இரண்டுமே கண்டுகொளப்படவில்லை. பெரிய வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அவரும் அமைத்துக் கொள்ளவில்லை. பாரதிராஜா அவருக்கு கொடுத்த துவக்கம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என நினைக்கிறேன். கல்லையும் நடிக்க வைப்பார் என்பது பாரதிராஜா பற்றி சொல்லும் சொல். ஆனால் பாரதிராஜாவின் திரைகதையாக்கத்தில் ஒரு கல்லும் நடிகராக தெரியும் என்றே நான் ...