முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுளுக்கே கிடைக்காத வசதி, வாய்ப்பு...அத வச்சி என்ன செஞ்கிட்டுருக்கோம்!

இந்த ஒரு மாசத்தில நாம ஒரு தடவையாச்சும் பொன்னியின் செல்வன்ங்கிற பெயரை உச்சரிச்சு இருப்போம். அதை படிச்சிருக்கோம் படிக்கல,  புடிக்கும் புடிக்காதுங்கிறத தாண்டி பேசியிருப்போம். நாம பொது சமூகத்தோட  இணைச்சிருக்கோம். இணைக்கப்பட்டிருக்கோம்னு தெளிவா தெரியுது. உடனே ஒரு விசயம் பேசு பொருள் ஆகுது. ஒரு காலத்தில் எம்.ஜியார் படமோ சிவாஜி படமோ அட அரசின் ஏதோ ஒரு அறிவிப்போ வந்தா தண்டோட போடணும்( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது)... அது பரவ எப்படியும் ஒரு வாரமாகும். இது நகரத்திற்கு. அட எம்.ஜியார் இறந்த செய்தி தமிழ்நாடு முழுக்க  அதாவது கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர  24 மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கு அப்படியில்லை. சுடச்சுட இன்னும் சொல்லபோனா மாவு ரெடி செய்யலாமானு அவங்க பேசும் போதே நாம தெரிஞ்சுக்கிறோம்.  அட, நானெல்லாம் சாதரண ஆள், என்னோட நண்பர் குழுகிட்ட ஒரு வயலின் வாங்கலாம்னு இருக்கேனு சொல்றேன், அது பற்றி பேசுகிறேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு வயலின் வாங்க  சொல்லி கூகுளில் தானே விளம்பர தகவல் வருது.  பேஸ் புக் வந்தா.. வயலின் வகுப்பு விளம்பரம் வருது. உலகம் இவ்ளோதான். இனி இப்ப...

இதையறிந்து பணம் ஈட்டுங்கள்...ஈர்க்கப்பட வைத்த நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும்..!

அதிக பணம் நிம்மதிக்கு கேடுங்கிறவன் எல்லாம் பணக்காரானவே இருக்கீங்க... கொடுங்க... வலிக்குதா செரிக்குதா நாங்க அனுபவிச்சு பார்த்து தெரிஞ்சுக்கிறோம்....  இது கார்த்திக் சுப்புராஜ் எழுத்துகள். எந்த  ஒரு மத ஆன்மிக சொற்பொழிவ கேட்டாலும்  இப்படி சொல்றானுக.  கோடி கோடியா சம்பாந்திச்சுட்டு இன்னும் சம்பாதிச்சுட்டு இருக்கிறவனும் இதையே சொல்றான்.  ஏன்ன்னா அவன் இடத்துக்கு இன்னொருத்தன் வருதை விரும்பாத எரிச்சலாக இருக்கலாம். ஒரு சாமியார் மடத்தில் அவரை அருகில் இருந்து பார்க்க ஒரு தொகை, அடுத்த கட்டம் ஒரு தொகை கடைசி வரை ஒரு தொகை என நிர்ணயிக்கிறார்கள். அந்த கார்ப்ரேட் சாமியோ பணம் பண்ரதுக்கா இங்க வாழ வந்தோம்னு வெக்கமே இல்லாம பேசுறாரு. ஆடிட்டர் சொல் பேச்சு கேட்டு கார் தேவையா இல்லையானு கூட யோசிக்காம வருசம் ஒரு கார் இறக்கும் ஆசாமிகள் சொல்வார்கள்.... கயிற்று கட்டிலில் கூட உறக்கம், நிம்மதியான வாழ்க்கைனு.  ஆனா இவனுக எவனுமே பணம் இல்லாம  எதையும் செய்ய மாட்டானுக. ஏன்னா அவனுகளுக்கு தெரியும்.. பணம் எவ்ளோ முக்கியம்னு.  மாச வாடகை, பிள்ளைக படிப்பு,  தேவையான ஒரு நல்ல பொருளை வாங்க கா...

பாலினங்கள் அறிவியல் உடைத்து...காலம் ஏற்கும் சூழல் என்றோ?

 பாலினங்களில் நமக்கு தெரிந்தது ஆண் பெண் மட்டுமே. பிறகு திருநங்கை திருநம்பி என்ற மாற்றுப்பாலினங்கள் நமக்கு தெரியவந்தது. இப்போது அவர்களுக்கான உரிமைகள் குறித்து பேசிவருகிறோம். தன்பாலின ஈர்ப்பு குறித்தும் இப்போது பேச தொடங்கி இருக்கிறோம். ஆனால் பாலினங்கள் இத்தனை தானா ? என்றால் இல்லை என்கிறது அறிவியல். இவையெல்லாம் காலம் காலமாக இருந்தாலும் அறிவியல் இப்போது அதனை வகை படுத்துகிறது. ஆனால் மத நிர்வாக அரசுகளே அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. அது அப்படித்தான் தன் மத கொள்கைகளுக்கு  பாதிப்பு என கள்ள மெளனம் சாதித்து வரும். ஆனால் அறிவியல் உடைக்கும். காலம் ஏற்கும். சமீபத்தில் தமிழக அரசு ஒரு அட்டவணையை வெளியிட்டது. அதில் பலவகையான பாலினங்கள் இருந்தன. சிலர் அதில் சிரித்திருந்தார்கள். பலர் இதெல்லாம் இப்ப தேவையா என வழக்கம் போல நடுநிலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாய் அதனை யாரும் புரியவில்லை என்றே நினைக்கிறேன். அவன் ஆண். ஆண் தன்மையில் தான் இருக்கிறான். வாழ்கிறான். ஆனால் பெண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் ஆண்களையும் அவன் நாடமாட்டான். திருமண தாம்பயத்தில் பெரிய விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு...