இந்த ஒரு மாசத்தில நாம ஒரு தடவையாச்சும் பொன்னியின் செல்வன்ங்கிற பெயரை உச்சரிச்சு இருப்போம். அதை படிச்சிருக்கோம் படிக்கல, புடிக்கும் புடிக்காதுங்கிறத தாண்டி பேசியிருப்போம்.
நாம பொது சமூகத்தோட இணைச்சிருக்கோம். இணைக்கப்பட்டிருக்கோம்னு தெளிவா தெரியுது. உடனே ஒரு விசயம் பேசு பொருள் ஆகுது. ஒரு காலத்தில் எம்.ஜியார் படமோ சிவாஜி படமோ அட அரசின் ஏதோ ஒரு அறிவிப்போ வந்தா தண்டோட போடணும்( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது)... அது பரவ எப்படியும் ஒரு வாரமாகும். இது நகரத்திற்கு. அட எம்.ஜியார் இறந்த செய்தி தமிழ்நாடு முழுக்க அதாவது கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர 24 மணி நேரத்துக்கு மேல ஆச்சு.
இன்னைக்கு அப்படியில்லை. சுடச்சுட இன்னும் சொல்லபோனா மாவு ரெடி செய்யலாமானு அவங்க பேசும் போதே நாம தெரிஞ்சுக்கிறோம்.
அட, நானெல்லாம் சாதரண ஆள், என்னோட நண்பர் குழுகிட்ட ஒரு வயலின் வாங்கலாம்னு இருக்கேனு சொல்றேன், அது பற்றி பேசுகிறேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு வயலின் வாங்க சொல்லி கூகுளில் தானே விளம்பர தகவல் வருது. பேஸ் புக் வந்தா.. வயலின் வகுப்பு விளம்பரம் வருது.
உலகம் இவ்ளோதான். இனி இப்படித்தான். ஒரு வகையில நல்லது. என்ன ஒரு ஆறுதல்னா.. இது கூடிய சீக்கிரம் போரடிச்சு போகும். ஏன்னே எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்க்கையில சுவாரசியம் போய்டும்.
முன்னாடி டாம் & ஜெர்ரியை குழந்தைகள் டிவியில் அப்டி பார்ப்பார்கள். எங்கயாச்சும் கிளம்பிட்டு இருக்கும் போது டிவியில வந்துட்டா அப்டியே உக்காந்துடுவார்கள். இப்ப அப்டியில்லை.நினைச்ச நேரத்தில அத பார்க்கும் வசதி இருக்கு. இது நல்லதா கெட்டதானு கேட்டா.. காலத்திற்கு அறிவியலுக்கும் இயற்கைக்கும் அதெல்லாம் தெரியாது. அது வேலைய அது செஞ்சுட்டே இருக்கும். முடிஞ்சா வாழ்ந்துக்கோ. இல்ல ஓரமா உக்காந்து அழு. இதான் தாரக மந்திரம்.
இப்ப நாம செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னு தான். இப்ப இருக்கிற இந்த வசதியெல்லாம் ஒரு காலத்தில நம்ம (?) கடவுளுக்கே (??) கிடைக்காத வசதிகள் வாய்ப்புகள். அத வச்சி என்ன செஞ்சோம்ங்கிறது மட்டும் தான் நம்மோட வாழ்க்கை அறிவு இருக்கு.
முன்னோர்கள் முட்டாள்கள் இல்லைனு இன்னைக்கு கொஞ்ச பேரு உயர்த்தி பிடிக்கிறாங்க. ஆனா நம்மள முன்னோர தூக்கி பிடிக்க அந்த கொஞ்ச பேரும் இருக்கமாட்டாங்க போல.. ஏன்னா அறிவியலையும் காலத்தையும் அப்படித்தான் பயன்படுத்திட்டு வரோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக