அதிக பணம் நிம்மதிக்கு கேடுங்கிறவன் எல்லாம் பணக்காரானவே இருக்கீங்க... கொடுங்க... வலிக்குதா செரிக்குதா நாங்க அனுபவிச்சு பார்த்து தெரிஞ்சுக்கிறோம்....
இது கார்த்திக் சுப்புராஜ் எழுத்துகள். எந்த ஒரு மத ஆன்மிக சொற்பொழிவ கேட்டாலும் இப்படி சொல்றானுக. கோடி கோடியா சம்பாந்திச்சுட்டு இன்னும் சம்பாதிச்சுட்டு இருக்கிறவனும் இதையே சொல்றான்.
ஏன்ன்னா அவன் இடத்துக்கு இன்னொருத்தன் வருதை விரும்பாத எரிச்சலாக இருக்கலாம்.
ஒரு சாமியார் மடத்தில் அவரை அருகில் இருந்து பார்க்க ஒரு தொகை, அடுத்த கட்டம் ஒரு தொகை கடைசி வரை ஒரு தொகை என நிர்ணயிக்கிறார்கள். அந்த கார்ப்ரேட் சாமியோ பணம் பண்ரதுக்கா இங்க வாழ வந்தோம்னு வெக்கமே இல்லாம பேசுறாரு.
ஆடிட்டர் சொல் பேச்சு கேட்டு கார் தேவையா இல்லையானு கூட யோசிக்காம வருசம் ஒரு கார் இறக்கும் ஆசாமிகள் சொல்வார்கள்.... கயிற்று கட்டிலில் கூட உறக்கம், நிம்மதியான வாழ்க்கைனு.
ஆனா இவனுக எவனுமே பணம் இல்லாம எதையும் செய்ய மாட்டானுக. ஏன்னா அவனுகளுக்கு தெரியும்.. பணம் எவ்ளோ முக்கியம்னு.
மாச வாடகை, பிள்ளைக படிப்பு, தேவையான ஒரு நல்ல பொருளை வாங்க காத்திருக்கும் அவஸ்தை எல்லாமே அவனுகளுக்கு கிடையாது. அதுனால உபதேசம் செய்வான்.
நல்லா புரிஞ்சுகோங்க.. பணம் முக்கியம். அதுக்கான உழைப்பு முக்கியம். நீங்கள் வேலை பார்க்கலாம் சொந்த தொழில்ல இருக்கலாம்... என்ன வேணா இருங்க. ஆனா அந்த உழைப்பின் பின்னால் வரும் பணம் ரொம்ப முக்கியம்.
விருப்பபட்டு கேட்டாதான் இங்கே எதுவும் கிடைக்கும். இதான் பிரபஞ்ச விதி. இன்னொர் வகையில் சொன்னா ஈர்ப்பு விதிதான் பிரபஞ்ச விதி. ஈர்க்கப்படனும் ஈர்க்கப்பட வைக்கனும்.
ஒரு கட்டத்திற்கு பிறகு நம்முடைய பணம் தான் முதல் நிம்மதிய கொடுக்கும். அடுத்தடுத்த நிம்மதிய முதல் நிம்மதிய நீங்க தக்கவச்சுக்கிறதுல இருக்கு.
பணம் மட்டுமே எல்லாம் என்றாலும் தவறு. பணம் தானே என்றா அலட்சியமும் தவறு.
எவனாச்சும் பணமெல்லாம் முக்கியமில்லை அன்பு தான், அதுதான், இது தான் முக்கியம் என்றால்.... முகத்தை நன்றாக உத்துப்பார்துட்டு வந்து உங்க வேலைபாருங்க. ஏன்னா அவன் திரும்ப உங்ககிட்ட வந்து ஒரு நாள் நிப்பான். நீங்க உழைங்க. பணத்தை தக்க வைக்க முயலுங்கள். அதன் ஊடான அமைதியை கொண்டு, நிம்மதியை கொண்டு இன்னும் அழகாய் வாழுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக