பாலினங்களில் நமக்கு தெரிந்தது ஆண் பெண் மட்டுமே. பிறகு திருநங்கை திருநம்பி என்ற மாற்றுப்பாலினங்கள் நமக்கு தெரியவந்தது. இப்போது அவர்களுக்கான உரிமைகள் குறித்து பேசிவருகிறோம். தன்பாலின ஈர்ப்பு குறித்தும் இப்போது பேச தொடங்கி இருக்கிறோம். ஆனால் பாலினங்கள் இத்தனை தானா ? என்றால் இல்லை என்கிறது அறிவியல். இவையெல்லாம் காலம் காலமாக இருந்தாலும் அறிவியல் இப்போது அதனை வகை படுத்துகிறது. ஆனால் மத நிர்வாக அரசுகளே அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. அது அப்படித்தான் தன் மத கொள்கைகளுக்கு பாதிப்பு என கள்ள மெளனம் சாதித்து வரும். ஆனால் அறிவியல் உடைக்கும். காலம் ஏற்கும்.
சமீபத்தில் தமிழக அரசு ஒரு அட்டவணையை வெளியிட்டது. அதில் பலவகையான பாலினங்கள் இருந்தன. சிலர் அதில் சிரித்திருந்தார்கள். பலர் இதெல்லாம் இப்ப தேவையா என வழக்கம் போல நடுநிலையாக இருந்தார்கள். ஒட்டுமொத்தமாய் அதனை யாரும் புரியவில்லை என்றே நினைக்கிறேன்.
அவன் ஆண். ஆண் தன்மையில் தான் இருக்கிறான். வாழ்கிறான். ஆனால் பெண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் ஆண்களையும் அவன் நாடமாட்டான். திருமண தாம்பயத்தில் பெரிய விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பான். அவனுக்கு குழந்தை இருக்கும்.
அவள் பெண். பெண் தன்மையில் தான் இருக்கிறாள். வாழ்கிறாள். ஆனால் ஆண்கள் மீது பெரிய விருப்பமில்லை. அதே சமயம் பெண்களை விரும்ப மாட்டாள். திருமண தாம்பயத்தில் ஈடுபட விருப்பம் இருக்காது. ஏதோ கடனுக்கு வாழ்ந்திருப்பாள். அவளுக்கு குழந்தை இருக்கும்.
இந்த இருவரும் சமூக பொறுப்பு, மத கடமை, என திருமணம் செய்திருப்பார்கள். ஒருவேளை இந்த இருவரும் ஜோடியாக திருமணம் செய்திவிட்டால் அது நல்ல வாழ்கை. காரணம் இருவருமே வெளிப்பார்வைக்கு ஆண் பெண். ஆனால் அதன் தன்மையில் ஈடுபாடில்லை. மாறாக இது போன்ற பெண் அல்லது ஆண் சாதரணமான இணையை தேடினால் என்ன ஆகும் வாழ்க்கை. அதாவது வாரம் இரண்டும் முறையாவது செக்ஸ் தேடும் இணையர் என்றால் என்ன ஆகும் வாழ்க்கை ?
சரி, இது போன்ற பாலினங்கள் இப்போது தானா என்று தேடினால் காலம் காலமாய் இருந்திருக்கிறது. ஆனால் குடும்ப கெளரவம், பொம்பள இப்படி பேசலாமா ? இப்படி சொன்னா ஆம்பளைய என்ன நினைப்பாங்க? கலாச்சாரம் என பொத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கல்வி கேட்க சொல்கிறது. உனக்கு என்ன பிரச்சினை ? உண்மையில் இது பிரச்சினை இல்லை. இது ஒரு அடிப்படை படைப்பு. மாற்றுப்பாலினமாக தன்னை அறிவித்துக்கொண்டவர் வெளியில் தெரிவார்கள். ஆனால் இந்த மாறுபட்ட பாலினம் அவர்களாக சொன்னால் தான் உண்டு. அவர்கள் திருமணம் குறித்து பேசத்தொடங்கும் போது எனக்கு விருப்பமில்லை என்பார்கள். ஆனால் விட்டுவிடுமா கலாச்சாரம்… பண்ஃபாடு… பேசி மிரட்டி அழுது திருமணம் செய்து வைக்கும்.
பின்னர் இது அப்பாற்பட்ட உறவுகளில் வந்து நிற்கும். அல்லது நீதிமன்றங்களில் வந்து நிற்கும். திருமணம் தான் ஒரு ஆண் முழுமையாகிறான், பெண் முழுமையாகிறாள் என்ற மனப்பாங்கு இருக்கும் வரை இது தொடரும். குழந்தை தான் நீ ஆண் என்பதை சொல்லும் எனும் சமூகத்தில் இது இப்படியே தொடரும். இதெல்லாம் புரியவே நம் சாதீய சமுகத்திற்கு இன்னும் ஆண்டுகள் ஆகும்.
இது தவிர இன்னும் சில பாலின தன்மைகள் இருக்கிறது. அது தன் உடம்பை அமைப்பு அருவெறுப்பாய் உணரும் பாலினம். இது இயல்பாகவே பெண்கள் அதிகம் இந்த பாலினத்தில் வருகிறார்கள். ஏன் காரணம் என்றால் அதற்கான விடை, மதப்புத்தங்களில் சமூக சடங்குகளில் பண்பாடுகளில் சிக்கியிருக்கிறது. அதனை உணர நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
பாலினங்களில் பல்வேறு வகை இருக்கிறோம். இதனையெல்லாம் புரிந்து இதையெல்லாம் பேசவேண்டிய சமூகமாகிய நாம்,ரொம்பவே சுருங்கி இருக்கிறோம். பாலினம் மாற்றுபாலின பாலியியல் வேட்கையை பற்றி மட்டுமே பேசுகிறோம். காரணம் அப்போது தான் நாம் வெளிப்படுவோம் என நம்புகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக