வழக்கமான சேட்டன்கள் மொழியில் கொஞ்சம் குடும்ப உளவியல் பேசியிருக்கும் படம். சும்மா பெண்ணோட சுதந்திரம், நீதி, சமத்துவம் மட்டுமே பேசல. நாம் வாழும் சமூகத்தோட போலி தன்மையை இந்த படம் கடைசி வரை பேசிட்டே வருது. அதுவும் நுட்பமாக. புருசன் அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்டி ஒரு பொண்னு முடிவெடுத்தா இந்த சமூகம் என்ன நினைக்கும். அந்த குடும்பம் என்ன நினைக்கும். முக்கியமா புருசன் என்ன நினைப்பாங்கிறதுதான் படம். ஜெயா பிறந்ததில் இருந்தே அவளுக்கு சாய்ஸே இல்லை. எல்லாமே சான்ஸ் தான். அதை அவ தக்க வைக்கனும் அதுக்கு தானே கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு. நம் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கிற எல்லாமே சான்ஸ் தானே. அவர்களால் தேர்வு செய்ய பெரிதாக வாய்ப்பு இல்லை. நல்ல மார்க்க எடுத்தாலும் இது நம்மாளுக(?!) காலேஜ், பெரியப்பாவோட சித்தப்பா மக வயித்து கொழுந்தியா இந்த காலேஜ்ல புரொபசர் இருக்கா, வீட்டு பக்கத்தில இப்படித்தான் அமையும். விருப்பபட்ட கல்லூரியோ, படிப்போ நடுத்த குடும்பங்களில் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்றைக்கு கொஞ்சம் மாறியிருந்தாலும் எல்லாருக்குமான வாய்ப்பாக இது அமையவில்லை. படிப்பு, ஆடைகள், வாய்ப...