தலைதலைமுறையாக சண்டை போட்டே சினிமா வளர்த்த நாடு இந்தியா. இதில் தமிழ்நாடும் அப்படியே தொட்டு தொடருகிறது சிவகார்த்திகேயன் காலம் வரை..
தீடிரென விஜய் நம்பர் 1 என அவர் படத்தின் தயாரிப்பாளாரே சொல்கிறார். அவருக்கு தியேட்டர் அதிகம் கொடுங்கள் என்கிறார். சமீபத்தில் பீஸ்ட் படம் மட்டுமே வெளியானது. உடன் டப்பிங் கே ஜி எஃப்2. பீஸ்ட் படத்திற்கு அதிகம் திரையரங்கு. அதனையும் ரெட் ஜெயன்ட் தான் வெளியிட்டார்.
ஆனால் இரண்டாம் நாளே படம் பப்படம் ஆனது. ( வசூல் எடுத்துவிட்டது. ) தியேட்டர் அதிபர்கள் கேஜிஎப்2 பக்கம் நகந்தார்கள். ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஒன்றும் சொல்லவில்லை. பீஸ்ட் வசூல் குறையும் போது கேஜிஎஃப்2 நோக்கி நகர்ந்தார்கள். வசூலை எடுத்தார்கள். நம்பர் 1 நம்பர் 2 எல்லாம் இல்லை. வசூல் தான் இங்கே எல்லாம். கேஜிஎஃப்2 உடன் தோற்ற அந்த கோவம் விஜய்க்கு உண்டு.
விஜய் வாரிசு படத்தை செல்வகுமார் என்பவர் படம் தொடங்கிய பொழுதே வாங்கிவிட்டார். இவர் தான் விஜய் அடுத்த படம் தயாரிப்பாளர். வேறு யாரும் வாங்கி படம் ஏதும் பிரச்சினை என்றால் தன்னிடம் வருவார்கள் அதற்கு நாமே வாங்கிவிட்டால் சமாளித்துகொள்ள்லாம் என களத்தில் இறங்கினார்.
இன்னொரு பக்கம் துணிவு வியாபாரம். அஜீத் வலிமை கொஞ்சம் இறங்குமுகமே சந்திந்தது. போனி கபூர் படம் தொடங்கிய இரண்டு மாதத்திலே ரெட் ஜெயன்ட்டிடம்
கொடுத்துவிட்டார். இது தான் நிலவரம்.
கண்டிப்பாக பாதி பாதி தியேட்டர் ஒதுக்கியே ஆக வேண்டும். வீரம் , ஜில்லா இப்படித்தான் வெளியானது. பிறகு வீரம் தியேட்டர் அதிகரித்தது. இது எல்லாருக்கும் தெரியும்.
தீடிரென தில் ராஜூ உதயநிதி பெயரை பகிரங்கமாக சொல்வது என்பதன் பின்னால் அரசியல் இருக்குமென்றே நம்புகிறேன். விஜயின் வரலாறு அப்படி. இரும்புபெண்மணிக்கு பம்மினார் சரி. ஆனால் எடப்பாடிக்கும் பம்மி நின்றார். அவரை எடுப்பார் கைப்பிள்ளையாக்குவது எளிது.
இங்கே அதுதான் நிகழும் என்றே நம்புகிறேன். சமமாக வேண்டாம் எங்களுக்கு அதிகம் என்பதே கேவலமான வார்த்தைதான். கடைசி படம் என எடுத்தால் இருவருமே இரண்டாம் வாரம் தியேட்டரில் ஆள் இல்லை என்ற படத்தை கொடுத்துள்ளார்கள்.
நம்பர் ஒன் எல்லாம் நீங்க சொல்லிக்கிறது இல்லை. நாங்க படம் பார்த்து நல்லாருக்குனு சொல்லி அடுத்த காட்சிக்கு கூட்டம் வருவது தான் நல்ல படம். அந்த படம் ஹீரோ தான் அப்போதைக்கு நம்பர் 1.தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் அமர்ந்துகொண்டு என்ன அர்த்தத்தில் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. ரெட் ஜெயன்ட் நிறுவனம் 'துணிவு' படத்தை வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரேயொரு தியேட்டரைக்கூட கன்ஃபார்ம் செய்யவில்லை. ஒரு யூகத்தில்தான், தில் ராஜு இப்படி பேசுகிறார். எந்த எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை ரெட் ஜெயன்ட் தியேட்டர்களை கன்ஃபார்ம் செய்திருந்து, தியேட்டர்களை பிளாக் செய்து வைத்திருந்தால், அவர் இப்படி பேசுவதில் நியாயம் இருக்கிறது. தியேட்டர் ஓனர்களைப் பொறுத்தவரை விஜய், அஜித்துக்கு எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்கமாட்டார்கள்.
இருவருமே சமமாக நடிக்கக்கூடிய முன்னணி நடிகர்கள். எங்களுக்குத் 'துணிவு'தான் வேண்டும், 'வாரிசு'தான் வேண்டும் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. ரெட் ஜெயன்ட் புக்கிங் கொடுத்தால்தான், தங்களுக்கு எந்தப் படம் வேண்டும் என்பதை தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்வார்கள். அதற்குள்ளாகவே, எங்களுக்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று கேட்டால், உடனே கொடுத்துவிடுவார்களா? அதேமாதிரி, விஜய்தான் நம்பர் 1 ஸ்டார் என்றும் தில்ராஜு கூறியுள்ளார். சினிமாவில் நம்பர் 1 ஸ்டார் கதைதான். படம் நன்றாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக, அஜித், விஜய், கமல்ஹாசன் படங்கள் வந்தன. இவற்றுடன் ஒப்பிடும்போது, 'பொன்னியின் செல்வன்' வசூலை வாரிக்குவித்தது. அப்போ, மிக முக்கியமானது கதைதானே? கமல் நான்கு வருடங்களாக படமே நடிக்கவில்லை. 'விக்ரம்' வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போ, விஜய், அஜித்தை விட கமல்தான் நம்பர் ஒன் நடிகர் என்று சொல்ல முடியுமா?
சினிமாவில் எந்தப் படம் நன்றாக உள்ளதோ, அதுதான் சூப்பர் ஹீரோ. பொதுமக்கள் நடிகர்களின் முகத்திற்காக தியேட்டருக்குச் செல்வது கிடையாது. படம் நல்லாருந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள். அப்படி, பார்த்தால் 'பீஸ்ட்' படமே தோல்விதான். தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்துகொண்டு, 'எனக்குதான் அதிக தியேட்டர் கொடுக்கணும். விஜய்தான் நம்பர் 1 ஹீரோ' என்கிறார். யார் பெரிய ஸ்டார் என்பது எங்களுக்குத் தெரியாதா? எந்தக் கதை நல்லாருக்கோ அதுதான் பெரிய ஸ்டார்.
'கதை சூப்பரா இருக்கு'ன்னு சொல்லி சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்தான் தயாரித்தார். ஆனால், இங்கு தியேட்டரில் ஆளையே காணோம். அதற்காக, சிவகார்த்திகேயன் சுமார் ஸ்டார் என்று சொல்ல முடியுமா?. 'பிரின்ஸ்' படத்துடன் கார்த்தியின் 'சர்தார்' படமும் ரிலீஸானது. ஆரம்பத்தில், நிறைய தியேட்டர் ஓனர்கள் 'பிரின்ஸ்தான் வேண்டும்' என்று கேட்டு திரையிட்டார்கள். ஆனால், அடுத்த நாளே ஃபோன் செய்து சின்ன தியேட்டரிலிருந்து 'சர்தார்' படத்தைப் பெரிய தியேட்டருக்கு மாற்றிக்கொள்கிறோம் என்றார்கள். இது யாரும் கணிக்க முடியாத தொழில்.
இதில், எங்க ஆளுதான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று அதுவும் படத்தைத் தயாரிப்பவரே சொல்வது எந்த விதத்திலும் நியாயமே இல்லை. விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தேவையில்லாமல் பேசி பிரச்சனையை உருவாக்குகிறார்.
லிங்குசாமினு ஒரு இயக்குனர். நல்ல இயக்குனர் தான். மெனக்கெடுவாரு. ஆனா ஒரு படம் எடுத்துட்டு இது பத்து பாட்ஷாக்கு சமம்னு சொன்னாரு. இப்ப வரை அடிவாங்கிட்டு இருக்காரு.
ஒரு படம் கூட நடிக்காத ஹீரோ, கதை பிடிக்கலனா தூங்கிடுவேனு நக்கல் விட்டாரு. இப்ப மைக் பிடிச்சாலே வார்த்தை வரல அவருக்கு.
நா காக்க... நா காப்போரை அருகில் வைத்துகொள்க.
கருத்துகள்
கருத்துரையிடுக