முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவிலும் புகுத்தப்படும் அரசியல்... தேவையான விழிப்புணர்வா நாடகமா..!

உணவு சார்ந்த அரசியல் சமீப காலமாக பேசப்பட்டே வருகிறது. மாமிசம் சாப்பிடுறவா கிட்ட  அந்த குணம் இருக்கும்னு யாரோ ஒருத்தர் சட்டை போடமா உக்காந்து பேசிட்டு இருக்கார். இது யாரோ ஒருத்தர் இல்லை. இந்த மாதிரி நிறைய பேரு பேஷிண்டு இருக்கார்கள். நாமும் அதனை நம்பி நல்ல நாளும் பொழுதுமா ஏண்ட கறிங்கிற அளவுக்கு தெளிவா யோசிச்சுட்டு குழம்பி இருக்கோம்..

முதலில் உணவு என்பது சுவை சார்ந்து மட்டுமில்லை. அதன் மூலக்கூறான புரதம் சார்ந்தது. ஒரு அஞ்சு மிளகு எடுத்து வாய்ல போட்டு மென்னு பாருங்க. வயிறு என்ன ரியாக்சன் காட்டுதுன்னு. அதே பத்து மிளகு நல்ல வறுத்து பொங்கல் போட்டு வரும் போது சாப்டு பாருங்க.. வேறுபாடு தெரியும். 

நாம எதையும் பச்சையா சாப்டுறது இல்லை. எல்லாமே வேக வச்சு பொறிச்சு, வதக்கினு ஏகப்பட்ட கொதி நிலைக்கு கொண்டு போறோம். இப்போது நமக்கு கிடைக்க கூடியது எல்லாமே அதன் சத்து சார்ந்தவைகள் மட்டுமே.

மாடு பால் கொடுக்கும்.

கோழி முட்டை கொடுக்கும். 

மாடு குட்டி போடும்.

கோழி குஞ்சு பொறிக்கும்.

இப்ப விசயத்துக்கு வரேன் கோழி சேவல் கூட சேரலனாலும் முட்டை போடும். சேவல் கூட சேர்ந்து போடுற முட்டையில தான் குஞ்சு பொறிக்கும். சேவல் கூட சேரலனா அந்த முட்டை தான் ஆம்லேட், ஆஃபாயில், பொடிமசால்... நு வருது. 


நீங்க ஊருக்கு வெளியே பார்த்தா கோழிப்பண்ணை பெருசு பெருசா இருக்கும். நாம சாப்டுற முட்டை எல்லாம் சேவலால தான் வருதுனு நினைச்சா அவ்ளோ சேவல் உலகத்தில் இல்லை. அந்த கோழி எல்லாம் சேவல் இல்லைனாலும் குறிப்பிட்ட பருவம் தாண்டியதும் முட்டை போடும். முட்டை எண்ணிக்கை குறையவும் அது சிக்கன் ஆய்டும். 


பால் சைவம்னா முட்டையும் சைவம் தான்.அடுத்து இன்னொன்னு கோழிக்கு ஊசி போடுவாங்க. என்ன ஊசி. புரோட்டின் ஊசி ? அட அறிவாளி 100 கிராம் புரோட்டின் பவுடர் விலை தெரியுமா ? அத போட்டு ஒரு கோழி 250ரூ.க்கு கொடுக்கிற அளவுக்கு நல்லவங்க இருக்காங்களா என்ன ? நோய் தொற்று ஊசி அது. ஏன்னா ஒரு கோழி உடம்பு சரியில்லாம செத்துட்டா அடுத்த நொடி எல்லா கோழிக்கும் பரவிடும். அதுனால ஊசி போடுறாங்க.


அதான் ஊசி போடுறாங்களே.. அப்டினா மருந்து இருக்கும்லனு வந்திங்கன்னா... நீங்க வறுத்து பொறிச்சு அவிச்சு அந்த வெக்கையில கோழியோட புரதமே காணமா போது... மருந்து எல்லாம் இல்லாமலே போய்டும். 

அதுனால சிக்கன் சாப்ட்டா எனக்கு ஒத்துக்கலனா விட்றுங்க. எனக்கு கீரை சாப்டா ஒத்துக்காது. ஆனா மிக்ஸில அடிச்சு ஜூஸ் ஆக்கிட்டா ஒத்துக்கும். அந்த மாதிரி சிக்கன் எனக்கு சேரலனு சொல்லுங்க. ஆனால் சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட்டா அது மாதிரியே ஆய்டுவோம் எவனாச்சும் சொன்னா மூடிட்டு போடானு சொல்லுங்க. 

ஏன்னா அறுவாள எடுத்து எவன் வெட்டுனாலும் வெட்டும். நீங்க சைவமா அசைவமானு அது கேட்காது. பயன்படுத்துறவன் மூளையை பயிற்சியை பொறுத்தது. காந்திய சுட்ட துப்பாக்கி சைவம் சாப்பிடுபவன் கைகளில் இருந்தது. உலகையே தன் சைக்கோ டைப் கொலைகளால் போர்களால் மிரட்டிய ஹிட்ல சைவம். அன்னை தெரசா தன் இளவயதில் அசைவம். வயது முதிர்வால் சைவம்.                  ( செரிமான பிரச்சினைகளினால் )

உணவு என்பது உடல் தேவைக்கு. எந்த புனித நாடகங்களுக்கும் இல்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...