காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது. முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை. அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாற...