காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.
யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது.
முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை.
அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாறியது.
சரி அப்படியெனில் காங்கிரஸ் முதலாளித்துவ கட்சியா என்றால் அப்படி மட்டுமேயில்லை. அது ஒரு பெரிய உண்மைதான். ஆனால் அதன் ஊடாக வேறு சிலவும் இருக்கிறது. அதற்கு என தனி சித்தாந்தம் இல்லையே தவிர, மக்கள் மனநிலை என்னவோ அதனை கொண்டே ஆட்சியை நகர்த்தும். மக்களை பிரிப்போம், உரிமையை புடுங்குவோம், நாம் தான் எல்லாமே என இருக்காது. இடையில் இந்திரகாந்திக்கு அந்த ஆசை வர… பின்னர் வரலாறு அவருக்கு பாடம் கற்பித்தது.
இன்றைய இந்தியா வேறு, சுதந்திரம் பெற்ற இந்தியா வேறு.
அங்கே பசி பட்டினி, பெரிய வறுமை எல்லாம் இருந்தது. இன்றைக்கு சாலையில் ஒரு நாய் காலையில் அடிபட்டு கிடப்பதை பார்ப்பீர்கள். மாலையில் அது இருக்காது. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்தில் சாலையில் அப்படி மனிதர்கள் இருந்தார்கள் என்றால் நம்ப முடியுமா?
பல நாள் நாறிக்கொண்டு இருந்தார்கள், பிணங்களாக… இதனை செய்ய நிர்வகாமே இல்லை. அவர்கள் உருவாக்கினார்கள். வேலையில்லை. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்கள். கல்விச்சாலைகள் உருவாக்கினார்கள். ஐந்தாண்டு திட்டம் உருவாக்கி மாநிலங்களுக்கு என்ன தேவையென உணர்ந்து உருவாக்கினார்கள். இதில் குறைகள் உண்டு. மறுக்கவில்லை. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள்.
நீங்க நம்ப மாட்டிங்க பசியால் ஒருவன் சாக கூடாது என்பதை நிறுத்தவே இங்கே பல ஆண்டுகள் ஆகின. காங்கிரசக்கு என சித்தாந்தம் இல்லையே தவிர மக்களுக்கு என்ன தேவை என்பதை கொஞ்சம் முதலாளித்துவ பார்வையோடு அணுகும் தன்மை இருந்தது. அதன் பலன்கள் தான் பல லாக்டவுண் கடந்தும் இங்கே பட்டினி சாவுகள் பெரிதாக இல்லை.
ஒரு அடிப்படையான சித்தாந்தம் இல்லை. இதனாலே காங்கிரஸ் இன்று திணருகிறது. அங்கே இருப்பவர்கள் எவருக்கும் ஒன்றும் புரியாது. காமராசருக்கே புரியவில்லையே ? புரிந்திருந்தால் ஒருவரை உண்ணாவிரதம் இருக்கவிட்டு சாக விட்டிருப்பாரா ? அதன் பிறகு காங்கிரஸ் எழவே முடியவில்லை.
இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் என வலிமையாக அமரும் போது அது வேலை செய்யும். இல்லாத போது அவர்களுக்கு என்ன செய்ய என தெரியாது. அந்த கட்சியில் இருப்பவர்களை பிடித்து கேளுங்கள் என்ன சித்தாந்தம் என்று, மக்களுக்கு நல்லது செய்யனும் என்பார்கள். அவ்ளோதான் தெரியும். ஆனால் இந்தியாவில் மக்கள் என்பது மக்கள் கூட்டம் மட்டுமில்லை. அவர்களுக்கு மதமுண்டு, சாதியுண்டு, உட்பிரிவுண்டு, மொழியுண்டு, இனமுண்டு இது எதுவும் காங்கிரசுக்கு புரியாது.
இதையெல்லாம் புரிந்து பிஜேபி ஆடுகிறது. பிரித்து வைத்து தன் நலனை காத்துக்கொள்கிறது.
தனக்கென ஒரு சித்தாந்தம் இல்லாமல் போனதால் ஒரு தலைமுறையை ஈர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. அதன் விளைவுதான் கார்த்திக் போன்ற அரைகுறை எம்பிக்கள் அங்கே நிரம்பி வழிகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு தேவை காங்கிரஸ் தான். பிஜேபி அல்ல. காரணம் பிஜேபியால் மக்கள் வாழ முடியாது. மதம் வேண்டுமானால், மத நிறுவனங்கள் வேண்டுமானல் கோடிகளில் வாழலாம். அதனை அண்டிபிழைக்கும் சிலர் வாழலாம்.
காங்கிரசால் மட்டுமே மக்கள் மக்களாக வாழ முடியும். ஆயிரம் குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் மக்கள் இயக்கம். பிஜேபி பாசிச இயக்கம். இது புரிந்தால் தான் காங்கிரஸ் பக்கம் நம் பார்வை செல்லும். ஆனால் ஆக பெரிய சோகம் இது காங்கிரசுக்கே தெரியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக