பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம்.
ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை). மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன்.
ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை.
ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொண்டேயிருக்கிறார்.. என் மகன் படிப்பு என்னாகுமென.. அவர் மனைவி அவருக்கு தைரியம் சொல்கிறார்....
இன்னொரு பக்கம்... ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ.. பிரிவு... வயது வேகத்தில் தவறான சிந்தாந்தகளால் டாஸ்மாக் உள்ளே இழுக்கப்பட்டு.. வாழ்க்கையை சக்கையாக்கி வெளியே தூக்கி எறிந்திருக்கிறது... எல்லார் கண்களிலும் உயிர் வாழும் ஆசையிருக்கிறது.. ஆனால் அந்த ஆசை காலம் கடந்து வந்திருக்கிறது..
ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மனிதனே.. எதை குடிக்க வேண்டும்... எதை உணவாக எடுத்துகொள்ளவேண்டும்... எப்படி வாழவேண்டும் என தீர்மானிக்க அவருக்கு உரிமை உண்டு... ஆனால் எப்போது திருமணம் செய்து குழந்தை பிறந்ததோ அப்போதாவது அவர்கள் வாழ்க்கைமுறை சற்றே மாற்றவேண்டும்...
ஒரு குடிகார அப்பாவினால் குடும்பமே நிலைகுலைந்து அமர்ந்திருக்கிறது... தன் உடலை பாதுகாக்காமல்.. அதிக சக்கரையினால்.. ஒரு காலை இழந்து வீல் சேரில் செல்கிறார் ஒரு மார்கெட்டிங் ஊழியர்... அவரது குழந்தை விளையாட்டாக அந்த வீல்சேரை தள்ளி செல்கிறது...
கொஞ்சம் யோசியுங்கள்... உங்கள் வாழ்க்கை முறையை சற்றே உற்றுநோக்குங்கள்... உடற்பயிற்சி/யோகா/நடைபயிற்சி என ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள்.... உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆல்கஹால்/குட்கா/டொபாக்கோ முதலில் குறைக்க முயற்சியுங்கள்.... பின்னர் நிறுத்துவிடுங்கள்... இல்லையென்றால்... உங்கள் பாசமான குடும்பம் , நீங்கள் அவர்களுக்காய் சேர்த்துவைத்திருந்த பணத்தை மருத்துவமனையில் கட்டிவிட்டு... நிர்கதியாய் இருக்கும்...
அந்த மருத்துவமனையில் தசை நார் பிரச்சினைகள் தொடர்பான ஒரு பிரிவு இப்படியொரு பிரிவு இருப்பதே எனக்கு முன்பே தெரியாது. நடக்கவே முடியாதவர்கள், திரும்ப முடியாதவர்கள், உட்கார முடியாதவர்கள் என பலரை பார்த்தேன் அங்கு எல்லாருமே 45 வயதை கடந்தவர்கள். வாலிபத்தில் எல்லையில் இருக்கும் அவர்கள் குழந்தைகள் அவர்களை அமர வைத்துவிட்டு நின்று கொண்டே மொபைல் நோண்டுகிறார்கள்.
ஒரே ஒரு நாள்... ஏதேனும் மருத்துவமனையில் வெறும் மனிதனாக அமர்ந்து பாருங்கள்... உலகம் புரியும். கண்டிப்பாக இது உபதேசம் அல்ல என்னுடைய வலியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
நீங்கள் தனி மனிதர் எனில் இந்த பதிவை சிரித்துவிட்டு கடந்துவிடுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறது எனில் தயவு செய்து மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக