இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும் உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும் போது அவர்கள் சொல்லுவார்கள் எல்லாரும் கிளம்புங்கள் என்பார்கள். நாம் கண்ணீரோடு திரும்பும் போது அந்த குரல் வரும்.. முதலாளி ஒரு ஐநூறு ரூபாய் என்பார்கள்.
நம்மால் அப்போது ஏதும் செய்ய முடியாது. கோவம் வரும் நிலையில் கூட இருக்கமாட்டோம். அவர் கேட்பதை கொடுப்போமா என தெரியாது ஆனால் ஏதோ ஒரு தொகை கண்டிப்பாக கொடுப்போம். அவர்கள் முதலிலே கண்டுவிடுவார்கள், யார் கொள்ளி வைக்க போகிறார், யாரிடம் எல்லாரும் அனுமதி கேட்பார்கள் என்பதையெல்லாம் தேடி சரியாக கேட்பார்கள். இத்தனைக்கும் முதலிலே விறக்க்கு எவ்ளோ, சடங்கு சாங்கியம் கூலி எல்லாம் சேர்த்து ஒரு 25,000 பேசி வாங்கிவிடுவார்கள். அப்படியும் இது போன்ற பணம் கேட்கும் நிலை நடக்கும்.
இது சரியா தவறா என்றெல்லம் நான் யோசிக்க போவதில்லை. ஒரு மனிதன் தன் உறவொன்றை இழந்து ஒரு வெறுமையில் இருக்கும் சூழலில் ஒருவரால் பணம் கேட்க முடிகிறது எனில், அவரின் வாழ்வு சூழல் எப்படி இருக்கிறது? பணி சூழல் எப்படி இருக்கிறது. என்பதையே நான் யோசிக்கிறேன்.
பிணவறைக்கும், ஆப்ரேசன் தியேட்டருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒன்று உயிரோடு இருக்கும் போது நடக்கிறது. இன்னொன்று இறந்த பின்னர் நடக்கிறது. இரண்டிலுமே உடல் ஒருவரை நம்பி ஒப்படைக்கபடுகிறது. ஆனால் வாழ்வின் தர சூழல் அவர்களை அப்படி மாற்றிவிடுகிறது.
பிறகு விசாரிக்கும் போது தெரிகிறது அவர்களின் அடிப்படை சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. இப்படியான தொகை தான் அவர்கள் குடும்பத்தை கொஞ்சமாவது வாழ வைக்கிறது.
ஒரே ஒரு முறை எம் எல் ஏ அல்லது எம். பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் போதும் சாகும் வரை பென்சன் வரும் , அதோடு இன்ன பிற வசதிகளும் உண்டு என்ற அதே தேசத்தில் தான், வாழ் நாள் முழுக்க இறந்து போன உடல்களோடு மட்டுமே சுவாசிக்கும் ஒருவன் மற்றவர்கள் அழும் போதும் எனக்கு ஏதாவது செய்ங்க முதலாளி (சார்) னு வந்து நிக்கிறான் எனில்... இங்கே யார் திருந்த வேண்டும் ?
அவனை அப்படி கேட்க வைக்கும் சூழல் எது ? ஏன் இப்படி இவன் கேட்டுகிட்டே இருக்கான்னு நம்மை யோசிக்க வைக்கும் சூழல் எது ?
கருத்துகள்
கருத்துரையிடுக