முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்மிடையே மதம் காலாவதியானல் தான் மனிதம் பிறக்குமா..?

சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி. ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்...

கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வன் படத்தில் மாற்றமா..!எதனால் ஏன்?

பொன்னியின் செல்வன் முழுக்கமுழுக்க கற்பனை நாவல். இதனை கல்கியே ஒப்புக்கொள்வார். கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் இந்த கற்பனை உதயமாகிறது. சுந்தரசோழர் என்ற மன்னர் ஆட்சி செய்கிறார். அவருக்கு வானவன் மாதேவி என்ற ஒரு பட்டத்து ராணி. இருவருக்கும் மூன்று குழந்தைகள், ஆதித்த கரிகாலன் ( இரண்டாம் ), குந்தவை, அருள்மொழி. இதில் ஆதித்தகரிகாலைனை பட்டத்து இளவரசராக முடி சூடிய கல்வெட்டுகள் இருக்கிறது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எதிர்க்கும் வாரிசு அரசியல் போல எனக்கடுத்து இவர் தான் மன்னன்னு அறிவிப்பதற்கு பெயர் தான் பட்டத்து இளவரசர். இந்த கரிகாலனுக்கு மனைவியில்லை.  இந்த ஆதித்த கரிகாலன் தீடிரென மறைந்து போகிறார்.  விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் (உத்தமசோழன் – மதுராந்தகர்) அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனா...

காமெடி ட்ராக்கில் கலக்கிய வடிவேலுவா இப்படி மாறி(ரி)யுள்ளார்..!

நகைச்சுவை நடிகர்கள் திடிரென கொஞ்சம் எமோஷனலாக பேசும் போது கவனிக்கப்படும். வெளிப்பாடுகள் கொஞ்சம் சரியாக அமைந்துவிட்டால் அது கொண்டாடப்படும். எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எல்லாமே அப்படி கொண்டாடப்பட்டவையே. நாகேஷ்க்கு பிறகு நகைச்சுவை கூடவே கொஞ்சம் எமோஷனல் ஆக்டிங் என எவருக்கும் சரியாக வாய்க்கவில்லை என்றே கருதுவேன்.  கவுண்டமணிக்கு என சில படங்கள் இருந்தாலும் அதிலும் கொஞ்சம் செயற்கை தெரிந்தது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் கவுண்டர் நன்றாக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் ஈர்ப்பை கொண்டுவரவில்லை என்றே சொல்லுவேன். நடிகைகளில் மனோராமவிற்கு பிறகு யாருமே அங்கே வரவில்லை. அவர் முடிசூடா ராணியாகவே இருந்தார். நகைச்சுவை + எமோஷனல் என கடைசி வரை நடித்தார். நாகேஷ்க்கு பிறகு என்றால் எனக்கு வடிவேலு நியாபகம் வருகிறார். தேவர்மகனில் ஒரு காட்சியில் கலங்கடித்தவர் அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை பக்கமே பயணித்தார். ”பொற்காலம்” படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென டிராக் மாதிரி 4 நிமிட காட்சியில் படத்தையே தன் பக்கம் திருப்பிவிடுவார். நிமிடத்துக்கு முகபாவனையும் அதற்கேற்ற உணர்ச்சியும் மாற்ற தெரிந்த நட...