பொன்னியின் செல்வன் முழுக்கமுழுக்க கற்பனை நாவல். இதனை கல்கியே ஒப்புக்கொள்வார். கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் இந்த கற்பனை உதயமாகிறது. சுந்தரசோழர் என்ற மன்னர் ஆட்சி செய்கிறார். அவருக்கு வானவன் மாதேவி என்ற ஒரு பட்டத்து ராணி. இருவருக்கும் மூன்று குழந்தைகள், ஆதித்த கரிகாலன் ( இரண்டாம் ), குந்தவை, அருள்மொழி. இதில் ஆதித்தகரிகாலைனை பட்டத்து இளவரசராக முடி சூடிய கல்வெட்டுகள் இருக்கிறது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எதிர்க்கும் வாரிசு அரசியல் போல எனக்கடுத்து இவர் தான் மன்னன்னு அறிவிப்பதற்கு பெயர் தான் பட்டத்து இளவரசர். இந்த கரிகாலனுக்கு மனைவியில்லை.
இந்த ஆதித்த கரிகாலன் தீடிரென மறைந்து போகிறார்.
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் (உத்தமசோழன் – மதுராந்தகர்) அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.
இப்படி திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. இதன்பிறகு அவர் சித்தப்பா ஒரு 14 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். அதன் பிறகு அருள்மொழி ஆட்சிக்கு வருகிறார். அவர் தன் அண்ணனை கொன்றவர்களை தண்டிக்கிறார்.
சரி அண்ணனை கொன்றவர்களை அவர் எங்கே தேடினார் ?
ரொம்பவெல்லாம் தேடவில்லை. அதில முக்கால்வாசி பேர் ஆதித்தகரிகாலன் மற்றும் அருள்மொழியின் சித்தப்பா உத்தமசோழன் ஆட்சியின் அமைச்சராக, அரச நிர்வாகியாக பதவி வகித்தார்கள். அதனால் அருள்மொழி ரொம்பவெல்லாம் தேடவில்லை. அவர்களுக்கு தூக்கு தண்டனையோ, சிறை தண்டனையோ விதிக்க வில்லை, நாட்டை விட்டு வெளியே போங்கடானு சொல்லிட்டு போயிட்டார். அவ்ளோதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இன்னொரு பக்கம் சோழ ராணிகளில் வானவன் மாதேவி ரொம்பவே முக்கியமானவர். எதனால் முக்கியமானவர் என்றால், இவர் மட்டுமே சுந்தரசோழர் இறந்த பிறகு உடன்கட்டை ஏறியவர். அப்போது இவர் புலம்பியதாக ஒரு செப்பேடு இருக்கிறது. அதில் அய்யோ என்னொட பச்சிளம் குழந்தையை விட்டு போகிறேனே என்ற புலம்பியிருக்கிறார். ( அருள்மொழியை குறித்து சொல்கிறார் )
இவ்ளோ விடயங்கள் நமக்கு வரலாற்றில் இருந்து கிடைக்கிறது.
ஆதித்தகரிகாலன் 27 வயதில் இறந்து போகிறான். அவனை கொன்றவர்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் காலத்தில் அரச பதவிகளில் இருக்கிறார். அவரை அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த கரிகாலன் தம்பி தண்டிக்கிறார். அப்படி தண்டித்தவர்களின் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அதனாலே அவர்கள் தலையை கொய்யாமல் ஊரைவிட்டு வெளியே அனுப்புகிறார் சோழ மன்னன். எந்த சோழ மன்னன், புறாவுக்காக தன் சதையை வெட்டினானோ அவனின் வழித்தோன்றல், மாட்டிற்காக தன் மகனையே பலிகொடுத்த மன்னரின் வழித்தோன்றல், ( இவையெல்லாம் வரலாறு இல்லை ஆனால் மெய் கீர்த்திகள் ) அண்ணனை கொன்றவர்களை ஜஸ்ட் லைக் தட் ஊரைவிட்டு போங்கடா என தன் அரண்மனை கதவை மூடிக்கொண்டார்.
ஏன் ? ஏனில் அவருக்கு முன்னர் ஆண்டு உத்தமசோழர் ஆட்சி காலத்தில் இங்கே மனு தர்மம் நிலைநாட்டப்படுகிறது. பார்பனிய நிவந்தங்கள் அதிகரிக்கப்படுகிறது. சமண மடாலயங்கள் பார்ப்பனிய கூடராமாக மாறுகிறது. வேத பாடசாலைக்கு நிலங்கள் வழங்படுகிறது. சிறியதாய் பல கோவில்கள் கட்டப்படுகிறது. அதனை சுற்றியுள்ள நிலங்கள் பார்ப்பனருக்கு தானமாய் வழங்கப்படுகிறது.
அப்படியே கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கி மெளரிய பேரரசில் ஒரு மன்னன் இப்படித்தான் கொல்லப்படுகிறார். அசோகரின் மெளரிய பேரரசு பெளத்தம் தழுவுகிறது. பெளத்தம் பெரும் எழுச்சி அடைகிறது. கிட்டதட்ட 130 ஆண்டுகளுக்கு மேலாக அந்த சித்தாந்தம் இங்கே வேரூன்றுகிறது. அதனை அடக்க புஷ்யங்கமித்திரன் என்ற ஒரு பார்ப்பனன் பிரகத்ரிதனை கொல்கிறார். அத்தோட மெளரிய பேரரசு வீழ்கிறது. காலம் கிமு 130 . இதன்பிறகு சுங்க பேரரசு எழுகிறது. இப்போதுதான் மனுதர்மம் உருவாகிறது. பார்ப்பனர்களுக்கு என தனிசட்டங்கள் உருவாகிறது. இவையெல்லாம் பாடாலிபுத்திரம் என படித்திருப்பீர்களே அங்கே நடக்கிறது. (ஆதாரம் : 16-ஆம் நூற்றாண்டின் பௌத்த அறிஞரான தாரநாதர் எழுதியது ).
இப்போது மீண்டும் கரிகாலன் காலத்திற்கு வருவோம். சுந்தரசோழர் காலத்தில் சாளுக்கிய கல்வெட்டுகள் வாயிலாக, வரலாறு வாயிலாக ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு மரியாதை இல்லை. அவர்கள் கொடுமை படுத்தபடுகிறார்கள் என சொல்கிறது. அதாவது சமீபத்தில் சிலர் தமிழ்நாட்டில் எல்லா சலுகைகளும் அனுபவித்துகொண்டு தமிழ்நாட்டில் பிராமாணராக வாழ்வது கொடூரம் என சொன்னார்களே. அப்படி. இத்தனைக்கும் பாண்டியர்கள் காலத்தில் அவர்கள் நிலங்களை தானமாக பெற தொடங்கிவிட்டார்கள். ஆலயங்களில் உள்ளே நுழைய தொடங்கிவிட்டார்கள்.
அந்த சதியை மறுக்க, அல்லது மறைக்கவே நந்தினிகள் உருவாக்கி இருக்கிறார்கள். அதனை மெய்ப்பிக்கவே தொடர்ச்சியாக அவர்கள் கதைகள் சொல்கிறார்கள். கதைகள் ஊடாக நம்மையும் மன்னர் பெருமையில் திளைக்க வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சோழர்கள், பாண்டியர்கள் (பிற்கால ) காலம் தொட்டு நாயக்கர் பிரிட்டிஷ் ஆட்சி வரை ஆட்சி என்பது பார்ப்பனியத்திற்கு சேவகம் தான். அது இப்போதும் இலைமறைகாயாக தொடர்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக