ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை. இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர...