முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ? 

இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ? 

இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ? 

இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ?




இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி. 

இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே... 

விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.  

ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவனியுங்கள். இவர்கள் நாட்டிற்கு எவ்வளவு பெரிய கேடு என்பது புரியும்.

தமிழ்நாட்டில் செந்தில்பாலாஜி, இப்போது பொன்முடி என விரட்டுகிறார்கள். ஆனால் யோசியுங்கள் இது வெறும் ஊழலா ? இல்லை அதிகார திமிரடி மிரட்டலா ? குட்கா வழக்கில் விரட்ட, தலைமை செயலகத்தில் மிரட்ட உடனே ஆட்சியாளரின் காட்சி மாறியது, உசூர் நான் உங்கள் அடிமை என்றார் ஒன்றிய அரசை நோக்கி. இதுற்கு தான் ஊழல் விரட்டல் அப்போது பயன்பட்டது. இதோ இப்போது சரத்பவார் குடும்ப மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை அதிகார அமைப்புகள் மூலம் விரட்டி விசாரித்து அடிமையாக்கிவிட்டார்கள். இப்போது யார் மீது பல ஆயிரம்கோடி ஊழல் குற்றச்சாட்டு வைத்தார்களோ இன்று அவரே அங்கே நிதி அமைச்சராக இருக்கிறார். எனில் இது ஊழல் ஒழிப்பா இல்லை எங்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொள் இல்லை உன்னை என் அதிகார அமைப்புகள் மூலம் விரட்டுவேன் என்ற வெறி. 

இதனை ஒவ்வொரு மாநில கட்சியும் எதிர்கொள்கிறது. இன்று ஊழலில் உற்றுக்கண்ணே பிஜேபி தான். இதோ கர்நாடகத்தில் அவர்கள் தோற்க அவர்கள் நடத்திய 40% ஊழல் தாண்டவமும், மத தாண்டவமும் தான் காரணம். ஆனால் அதற்காக மட்டுமே அதனை எதிர்க்கவில்லை. என் எதிர்கால சந்ததிக்கு இந்த மூடர்கூட பிஜேபி சொல்லும் இந்த இந்தியா வேண்டாம். இவர்கள் பேசும் மதவாத இந்தியா வேண்டவே வேண்டாம். 

இன்னும் காலமிருக்கிறது. 

மிரட்டல் காட்சிகள் இருக்கிறது. 

கலவரங்கள் இருக்கிறது. 

நாடகங்கள் இருக்கிறது. 

ஆனால் நாம் உரக்க சொல்லவேண்டியது ஒன்றுதான். இந்த பிஜேபியின், ஆர் எஸ் எஸின் பார்ப்பனிய ஏவல்களில் இருந்து விடுபட்ட இந்தியா வேண்டும். நமக்கு நேரு கனவு கண்ட காந்தி உருவாக்க நினைத்த இந்தியா வேண்டும். அதில் குறைகள் இருந்தாலும் நம் உரிமை இருந்தது. அதனை மட்டும் நினைவில் கொள்ளுவோம்... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...