கோழியா முட்டையாங்கிற மாதிரி பாடலா இசையானு உருண்டுகிட்டு இருக்காங்க..! உண்மையிலே வைரமுத்து அந்த பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார். சில நேரங்களில் இசை, சில நேரங்களில் பாடல் என சொல்லியிருக்கிறார். அது உண்மையும் கூட. ஆனால் சொல்லியவர் வைரமுத்து என்பதால் பலருக்கு ஒவ்வாமை. அவரவர் கலருக்கு ஏற்றார் போல சிலர் ராஜாவை இழுக்க சிலர் வைரமுத்துவை இழுக்க இது போக கங்கை அமரன் ஏற்றிவிட்ட ஏணி பற்றியெல்லாம் பேசுகிறார். ( அத யார் சொல்றா பாத்திங்களா ? ) செய்யுள் : கவிதை : பாடல் : செய்யுள் என்பது இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் ஒரு பாடல் எனலாம். செய்யுளில் அலங்கார சொல்லைவிட கருத்தே முக்கியம் என இருக்கும். நிறைய இருந்தாலும் எல்லாருக்கும் புரிந்த ஒரு செய்யுளை சொல்கிறேன். வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே இதில் இசைத்தன்மை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இசைத்தன்மை என சொல்கிறேன். இசையென சொல்லவில்லை. இசைத்தன்மை என்பது வாசிக்கும் முறையே ஒரு தாளக்கட்டுக்குள் இர...