முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஸ்வாதி முதல் பள்ளி மாணவி வரை ஆக்கப்பூர்வமாய் வெற்றி பெற்றிருக்கோமா ?

 தியேட்டர்ல டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கிறோம், இல்லாட்டி ஆன்லைன்ல டிக்கெட் புக் செய்றோம். ரெண்டுக்கும் கொஞ்ச காத்திருக்கணும்.  அட , உக்காந்த இடத்தில சொமோட்டால ஆர்டர் போட்ட கூட காத்திருக்கணும். காத்திருந்தாதான் தெரியும் அது முடியுமா முடியாதானு.... வந்தது நல்லா இருக்கா இல்லையானு சொல்ல முடியும். என்ன சொல்ல வரேன்னா எதுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும். இந்திய நீதி ஆணையத்தில் செயற்கையாகவோ, அல்லது இயற்கையாகவோ ஒரு தாமதம் இருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் அங்கே குழுமி அறிக்கை தரவேண்டுமென்ற அடிப்படையே இதற்கு காரணம்.  ஒரு சாலைவிபத்தில் இன்சூரன்ஸ் கேட்டு அலைந்து பாருங்கள் எத்தனை டிபார்மெண்ட் அதில் உள்ளே வருகிறது என தெரியும். அட ஒரு சொந்த வீடு ஒன்றை கட்டிப்பாருங்கள் என்னென்ன டிபார்மெண்ட் அதில் உள்ளே வந்து நிக்குமென தெரியும். இவர்கள் எல்லாருமே ஒரே நாளில் அமர்ந்து கையெழுத்திடும் அமைப்பு எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மோசமாய் இருந்து கொண்டே இயங்குகிறது.  ஸ்வாதி என்றொரு பெண் இறந்து போகிறாள். உடனே நாம் கொதிக்கிறோம். அவன வெட்டுங்க, போலீஸ் என்ன செய்யுது, பாதுகாப்பில்லையா என ப...

தமிழ் சினிமாவில் பார்த்திபனின் மெனெக்கடல்கள் என்றும் பிரச்சினை தான்..!

 ஒரு படம் பார்க்க தோன்ற முக்கிய காரணமாக அமைவது அதன் பின்னால் இருக்கும் நடிகர் இயக்குனர் மட்டுமே. இன்னொர் பக்கம்  படத்தின் பெயர் அதன் போஸ்டர் வடிவமைப்பு போன்ற மெனக்கெடல்களும்  சேர்ந்தது தான். சுப்பிரமணியபுரம் படம் அப்படித்தான் கவனத்தை ஈர்த்தது. கைதி போஸ்டர் வடிவமைப்பு இது ஏதோ வேறுமாதிரியான படமென நம்மை கவனிக்க வைத்தது. இப்படியான சில படங்கள் உண்டு. இன்னொன்று இயக்குனர்கள். இவங்க இப்படித்தான் எடுப்பாங்கனு நம்மள நம்ப வைக்கிறது. ராஜமெளலி, ஷங்கர் படங்கள் எல்லாம் பிரம்மாண்டம் என பதிய வைப்பார்கள். இப்படியும் சில உண்டு. இன்னும் சில இயக்குனர்கள் வேறுமாதிரியான கதை களங்கள் தேர்வு செய்வார்கள். அது நமக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்.  ஒவ்வொரு படத்திற்கும் அது மாறுபடும். பாக்யராஜ், பாரதிராஜா  மணிவண்ணன் எல்லாம் இந்த வகையில் அடங்குவார்கள். இதில் பார்த்திபன் வேறு ஒரு தளத்தில் இயங்குகிறார். வித்தியாசமான படங்கள் கொடுத்தே ஆகவேண்டுமென மெனக்கெடுகிறார். ஆனால் அந்த மெனெக்கடல் தான் இங்கே பிரச்சினை.  அது என்ன செய்கிறது ஒரு கலைஞனை கதையை  கொலை செய்கிறது. ஒரு வீட்டில் இருக்கும் கடி...

சினிமாவில் இவர்களையும் கவனித்து கொண்டாடுங்கள்

சிவாஜி, எம்.ஜியார், கமல், ரஜினி இவர்கள் எல்லாரும் இன்னும் பலரும் தங்களை நடிகராக நீருபித்தவர்கள். சிவாஜியின் பாசமலர் இறுதிக்காட்சியை அந்த கால இளைஞர்கள் கூட்டம் கதறி அழுது கொண்டாடியது. எம்ஜியாரின் ஆயிரத்தின் ஒருவன் மேன்லி லுக்கை கொண்டாடி தீர்த்தது. கமலில் நாயகன் அட பாருய்யா நம்ம நாட்ல ஒரு உலக நடிகன் என்றெல்லாம் எழுதி தீர்த்தது. ரஜினி அண்ணாமலை சவால் காட்சியை தியேட்டர் உரைந்துபோய் ரசித்தது. இப்படி ஒரு படமில்லை பல படங்கள் குவிந்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் நடிகராக பல்வேறு வேடங்களில் வெளிப்பாடுகளில் தங்களை நீருபித்து நூற்றாண்டு சினிமா உலகின் கீரிடத்தில் வைரங்களாக மின்னுகிறார்கள். ஆனால் அவர்கள் 99% நடிகர்களாகவே மின்னியிருக்கிறார்கள். பெர்ஃபார்மராக ரொம்ப ரொம்ப குறைவே. இதில் ரஜினி எம்.ஜியார் 99.99% நடிகர் தான். மற்ற இருவரும் சில படங்களில், அல்லது ஒரு படத்தில் நடிகர் என்பதை தாண்டி சில இடங்களில் பெர்ஃமாராக(நிகழ்த்துபவராக) மின்னியிருக்க்கிறார்கள். சிவாஜியில் எல்லா படங்களையும் ஒரு தட்டில் வைத்து முதல் மரியாதை படத்தை ஒரு தட்டில் வைத்தால் முதல் மரியாதையின் நடிகர் சிவாஜி கொஞ்சம் மறைந்துபோய் பெர்ஃபாம...

பெற்றோராக உங்களது வயது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

 பாலூட்டி இனங்கள் என  எடுத்துக்கொண்டால் மனிதன் தான் கடைசி என நினைக்கிறேன். அப்படியிருக்கையில் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு உணர்வு உண்டு அது தங்களால் இந்த உயிர் வந்திருக்கிறது குறிப்பிட்ட காலம் வரை நான் பேணி வளர்க்க வேண்டும். பிறகு அதன் வாழ்வை அது பார்த்துக்கொள்ளும் என்ற அறிவு உண்டு. கடைசி காலத்தில் நாம போட்ட முட்டையில இருந்து வந்த புறா நம்மை பார்த்துக்கொள்ளுமா ? நாம போட்ட யானைக்குட்டி வயதான காலத்தில் நமக்கு தழை ஏதும் கொண்டு வந்து கொடுக்குமா (அதுகளத்தான் பிரிச்சு கோவில்ல பிச்சை எடுக்க வச்சிருவோமா அப்புறம் எப்படி தாய் பாசம் வரப்போது பாகன் பாசம் வேணும்னா வரலாம், நாமும் அத பெருமையா பேசலாம் ) என்றெல்லாம் யோசிக்குமா என தெரியவில்லை.  ஆனால் இந்த மனிதன் மட்டுமே தாய்மை புனிதம், தந்தமை தியாகமென உருவாக்கி வைத்திருக்கிறனோ.  நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா?  இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா? என சொல்லியிருப்பார் கண்ணதாசன். யோசித்தால் அது உண்மை. ஆனால் அதுதான் வாழ்க்கை. இங்கே சமூகம் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதனை நாகரீகம் வழி நடத்திச் செல்கிறது. இது ஒரு சங்க...