இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள். அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர். சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...
2023 ஆம் ஆண்டில் 17,526 சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை. ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும். அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம். அந்த பணத்தை மிச்சம் செ...