முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பண்டிகைகள் என்பது இதுதான் அன்றே கணித்த அறிஞர்..! சரியாக செயல்படுத்திய அரசு

  இந்தியாவின் பொருளாதார சுழற்சிகளில் பண்டிகைகளுக்கு பெரிய பங்கு உண்டு.  பண்டிகைகள் பின்னால் மூடத்தன கதைகளை தாண்டி பணம் ஒரு சுற்று சுற்றி செல்லும். இந்த ஒரு காரணத்திற்காக மக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்கலாம்.  பெரும்பாலான சிறுவணிகர்களுக்கு இந்த பண்டிகைகள் கொஞ்சம் போனசாக வருமானத்தை கொடுக்கும். தீடிரென முளைக்கும் சாலைகடைகள், தன்னை பெரிதாக அலங்கரித்துகொள்ளும் பெரிய கடைகள் என இந்த பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.  ஆனால் இந்த ஆண்டு பண்டிகை நெருங்கினாலும் தொழில் நகரங்களில் பணப்புழக்கம் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். குறிப்பாக சிவகாசியில் கடைசி 20 நாள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியெதும் இல்லை.  இவற்றுக்கெல்லாம் துணிக்கடைகள், பட்டாசுகடைகள் அதிகரித்திருப்பது ஒரு காரணமாய் இருந்தாலும் செலவழிக்கும் திறன் குறைந்திருக்கிறது என்கிறார்கள்.  அதாவது,பண்டிகைகளுக்கு செலவழிக்கும் தொகையை குறைத்திருக்கிறார்கள் அல்லது தேவையின் காரணமாக குறைந்திருக்கிறது. அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சம 7...

விஜய் தான் பிரச்சனை இங்க.. அரசியல் நடிப்பா யாருடைய இயலாமை இது..?

இங்கே நிறைய பேருக்கு விஜய் மேல நடிப்புக்கு அப்பாற்பட்டு பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்குனு நினைக்கிறேன் உண்மையை சொன்னா 'வலிமை'யை விட லியோ ஒரு எண்டர்டெயின் மூவிதான். என்ன ஒன்னு அவனுகளே ஏற்படுத்தின "எதிர்பார்ப்பை” அந்த படம் பூர்த்தி செய்யல.  தமிழ் சினிமாவில் "தளபதி” படமும் அப்படித்தான். பாட்டு, ரஜினி ஸ்டில், மம்மூட்டினு ஏக ஹைப். ஆனா படம் வேற மாதிரி இருந்துச்சு. முதல் ஒரு வாரம் தாண்டி படம் மெதுவா கீழே போச்சு. அப்புறம் விமர்சனம் விளம்பரம் எல்லாம் செஞ்சு படம் தப்பிச்சு ஓடுச்சு. லியோ படத்தை பொறுத்த வரை அந்த ஓவர் எதிர்பார்ப்பு தான் பிரச்சினையே. வெற்றிவிழா கொண்டாடலாமானு கேட்டா ? இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில படம் செலவழிச்ச தொகையை எடுத்துட்டாலே அது வெற்றிப்படம்னு ஆகிப்போச்சு. அப்படி பார்த்தா இது வசூலாச்சு. சரி வசூலாகலனு இருக்கட்டும். அதுனால நமக்கு என்ன ? இப்படி பொய்யா சொன்னா தயாரிப்பாளர் இல்லாமே போய்டுவான். அப்படி இல்லாமல் போன நடிகர்கள் இங்கே ஏராளம். யூடியூப், ரீல்ஸ், பேஸ்புக்னு ரொம்ப ஒவரா பேசிட்டே இருக்கானுக. விஜய் பட தயாரிப்பாளர்கள் அடுத்து விஜய் கூப்பிட்ட ஓடிப்போ...

Jovika விற்கு 🔥 விட்ட அறிவாளிகள் படிக்க வேண்டிய அவசிய பதிவு ⚠

அது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “. தான்.   ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எரிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எரி.. உனக்கு ஒரு டாலர் தரேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக்கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அது ஒரு நிகழ்ச்சி... தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். அதன் நவீன வடிவம் தான் பிக்பாஸ். அதில் பங்கேற்கும் பலரும் ஒரு விதத்தில் “செலிபிரேட்டி பைத்தியங்கள் “ கூடவே அதுக்கு கொஞ்சம் காசும் கொடுக்கிறாங்க என்பதுதான். பார்க்கும் மக்கள் எல்லாரும் முட்டாளாக்கிவிடலாம் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம்.ஆனால் அதனை நிஜமென நம்ப வைப்பார்கள். அதில் பேசப்படும் எல்லாமே சமூக கழிவுகளின்...

கடவுள் யாரை ஏமாற்றுகிறீர்கள்..? எல்லா மதத்திற்கும் ஒரு கடவுள் தான்..!

 9 நாளே நானே நடந்துக்குவேனு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசின பையன்.. இப்ப ஊழியம் பத்தியும் தன்னோட ஞான அருள் பத்தியும் பேட்டி கொடுத்திருக்கான். சமூகம் இவனை ரொம்ப சீரியசா எடுத்துக்கல... ஊழியம்ங்கிற பேர்ல இப்ப நிறைய காமெடி எல்லாம் நடக்குது. நகையை போடு. டான்ஸை போடுனு அது ஒரு பக்கம் போகுது. அதுல இதுவும் ஒன்னுனு கடந்து போகுது.  ஆனா எனக்கென்னமோ இந்த பையனை பார்க்கும் போது பெரிய பெரிய மத உபன்யாசகர் மாதிரி தான் தெரிஞ்சது. இங்க எல்லா மத்தையும் சேர்த்து தான் சொல்றேன். மதப் பெரியவர்கள் பேசுற எல்லார் பேச்சிலயும் இருக்கும் அதே நாடகதன்மை தான் இவனோட பேச்சிலயும் இருந்துச்சு. ஒருவேளை கடவுள் இருந்தா... அவருக்கு ஒரு அபிசேஷ மொழியோ, இல்ல அவரோட பெருமைகளை பேச ஊழியங்களோ, அவருக்கும் மனிதர்களுகும் இடையில் மீடியட்டரோ வச்சிருக்க மாட்டார். இதெல்லாம் செஞ்சா பாவம் இவ்ளோ குறையும், அதெல்லாம் கொடுத்த ஸ்பெஷலா சொர்க்கம் போய்டலாம் கண்டிப்பா கடவுள் சொல்லமாட்டார். இவனுக கட்டுன கோவில் ( எல்லா மதமும் தான் ) இவனுக உருவாக்குன மொழி, இவனுக உருவாக்குன சடங்கு, இவனுக உருவாக்குன வழிபாட்டு முறைனு ஒரு நாடகமே நடத்திட்டு இருப்பானுங்க....

அது எப்படி இந்த வயசுல மன அழுத்தம்..? உடையும் உருட்டு நியாயமாயிது..!

பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க...  மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்).  அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள். கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....   கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன்.  உங்க பணம் மத...

அட்லிக்கு அபார காழ்ப்புணர்ச்சி தான் பிளஸா..? இல்ல விஜயின் ரசிகன் என்பதா..?

எஸ்பிமுத்துராமன், ராஜசேகர், பி வாசு, ஹரி... இந்த இயக்குனர்கள் எல்லாரும் வேறு வேறு கால கட்டம். ஆனால் எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது இவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே லாஜிக் இல்லாத ஹீரோயிச மேஜிக் படங்கள்.  இந்த கதையை இப்படி சொன்னா ஓடும்னு இவங்களுக்கு தெரியும். ஊட்டி வரை உறவு கதையை பட்டி டிங்கரிங் பார்த்தா அது நடிகன். பெரிய இடத்து பெண் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தா அது சகலகலா வல்லவன். மணிசித்திரதாளு பட்டி டிங்கரிங் பார்த்தா அது சந்திரமுகி. இப்படி இவர்கள் எடுத்த படங்களில் பெரும்பாலும் இப்படித்தான். தெய்வமகன், அன்பே வா இப்படி பல படங்கள் அப்படியே சுடப்பட்ட படங்கள் தான். கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்.  அட்லி தன்னை அந்த வரிசையில் தான் சொல்கிறார். நான் வெற்றிமாறன்,மிஷ்கின், ரஞ்சித் டைப் இயக்குனர் இல்லை. ஹீரோயிச இயக்குனர் தான் என்கிறார். அவரின் முதல் படம் தவிர்த்த மற்ற படங்கள் எல்லாமே நல்ல கரம் மசாலா டைப் படங்கள் தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.  ஆனால் வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு காழ்ப்புணர்வு அவருக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று அவரின் தோ...

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை.  இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர...

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ?  இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ?  இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ?  இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ? இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி.  இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே...  விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.   ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவன...