முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

யாருடா நீங்கலாம் நல்லவன்னு காட்டிக்க ஒரு டிராமா ஸ்டேஜ் பண்றீங்க பாரு... அத தான் சகிச்சுக்க முடியல..!

"நல்ல” என ஒரு சொல் தமிழில் உள்ளது. அது பெரும்பாலான இடங்களில் மாட்டிக்கொண்டு பேய் முழி முழிக்கிறது. நல்ல மகனா இருப்பது நல்ல கணவனாக, நல்ல தொழிலாளியாக நல்ல பக்தனாக என இந்த ”நல்ல” நீடிக்கும்...  இந்த நல்ல என்பதற்கு சமூகம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்பது "கொத்தடிமையாக இரு" என்பதாக இருக்கும்.  உன் மேல் என்ன அதிகாரம் செலுத்தினாலும் நீ ஏன்னு கேட்கப்பிடாது... எல்லா மதங்களும் அப்டிதான்.. ஏன்னே கேட்க கூடாதுனு இருக்கும். இந்த மதங்கள் எல்லாம் கூடி நல்ல என்ற சொல்லு எல்லா உறவுகளிலும் நிலைகளிலும் விளக்கம் கொடுத்து வைத்திருக்கும். அதன் படி அந்த மத கடவுளே வாழ்ந்தது இல்லை. அது வேறுவிடயம். ஆனாலும் இந்த மத சமூகம் அந்த “நல்ல” என்ற ஒன்றில் நிலைபெற போராடிக்கொண்டிருக்கும்.  சரி ’நல்ல’ வாழ என்ன செய்யனும். ரொம்பவே சிம்பிள். நீங்க இந்த உலகத்தில வாழ வந்த மத்த கோடிக்கணக்கான உசுரு போல ஒரு உசுரு. எதையும் காப்பாத்த அழிக்க வரல. நா இல்லாட்டியும் இந்த உலகம் அது பாட்டுக்கு செயல்படும். நா இருந்தாலும் செயல்படும். யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்க செயல் செய்யல. நானும் யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க வரல. எனக...

தமிழர் வாழ்வியலில் மா(ம)தம் உணர்த்தும் உன்னத செய்தி?

தை மாத முடிவில் இருக்கிறோம். அடுத்து மாசி, பங்குனி என முக்கியமான மாதங்கள் தமிழர்களுக்கு. ஆம்.  குலதெய்வ வழிபாடு இந்த மாதங்களில் மேலோங்கி நிற்கும். அய்யானாரில் தொடங்கி கருப்பசாமி, பேராத்து அம்மன், சுடலை மாடன், இருளாயி, கருப்பண்ணசாமி, செண்பகத்தாயம்மாள், சொறிமுத்து அய்யனார், பெரிய கருப்பன்.... என நீளும் பட்டியல் அது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கூடிக்கொண்டாடி பகிர்ந்து பிரிதலே இந்த வழிபாட்டில் நோக்கமாக இருக்கும்.  வாழ்ந்துபோன ஒருவருக்கு நன்றி கூறும் இடமாகவே அது பார்க்கப்படும். பெரும்பாலும் வயக்காட்டு நிலங்களிலும், ஆத்தோர படுகைகளிலும், ஊருக்கு வெளியே வெட்ட வெளிகளிலும் வழிபாட்டு கூடுகைகள் இருக்கும். பெரிய கலையம்சத்தோடு எல்லாம் இருக்காது அந்த ஆலயங்கள். சக மனிதரை போலவே அந்த தெய்வங்கள் நிற்கும். அதன் வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பவரும் அந்த குடும்ப சொந்தங்களை சேர்ந்த ஒருவர் மட்டுமே. அவரே காப்புகட்டி அந்த வழிபாட்டு முறைகளை முன்னெடுப்பார்.  பிறகு தலைக்கட்டுகள் ( ஒருவனுக்கு திருமணமாகி தனியாக வரிகட்டினால் அவர் தலைக்கட்டு) அமர்ந்து பேசுவார்கள் .அடுத்தாண்டு இந்த மாதிரி செய்யணும் இதையெல்...

தேவை தானா இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்..? சமூக பார்வையில்

 இந்தியாவும் - ஹேப்பி ஸ்ட்ரீட்டும் : இந்தியா என்பது ஒரு சாதி சமூகம். பிறகு மத சமூகம். இங்கே சாதி தான் பிரதானம். சாதியை காக்கதான் இங்கே மதம் இருக்கிறது. மதம் காக்க கடவுள் இருப்பதாய் நம்புகிறார்கள். இந்த தேசத்தின் அடிப்படை சாதி பிறகு மதம். மனிதன் மண்ணாங்கட்டி எல்லாம் அப்புறம் தான்.  அப்படியான ஒரு மூட தேசத்தில் கொண்டாட்டங்கள் எதன் அடிப்படையில் இருக்கும் ? சாதியின் அடிப்படையில். மதத்தின் அடிப்படையில். இரண்டுமே முட்டாள்தன அடிப்படையிலும், மூடத்தன கூறுகளாலும் நிறைந்திருக்கும். அங்கே மனிதராய் இணைய வாய்ப்பில்லை. சாதியாய் இணையலாம். மதமாய் இணையலாம். ஒவ்வொரு ஊரியிலும் அரசின் ஆலயங்கள் இருக்கும். தனியார் ஆலயங்கள் இருக்கும். அரசு ஆலய கொண்டாடங்களில் அதிகாரம் ( பணம், அரசியல், சாதி ) மட்டுமே முக்கியத்துவம் பெறும். தனியார் ஆலயங்களில் சொல்லவே வேண்டாம் சாதிதான் கொண்டாட்டத்தில் முதன்மை பெறும். பக்தி என்ற பெயரில், வழிபாடு என்ற பெயரில் நீங்கள் பங்கேற்கலாம். அவ்ளோதான். அதில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது. இதே தான் ஊர்த்திருவிழாவிலும்.  தெருக்கட்டு பொங்கல் என கொண்டாடுவதும் பெரும்பாலும் ஒரே சாதிக்...

பண்டிகைகள் என்பது இதுதான் அன்றே கணித்த அறிஞர்..! சரியாக செயல்படுத்திய அரசு

  இந்தியாவின் பொருளாதார சுழற்சிகளில் பண்டிகைகளுக்கு பெரிய பங்கு உண்டு.  பண்டிகைகள் பின்னால் மூடத்தன கதைகளை தாண்டி பணம் ஒரு சுற்று சுற்றி செல்லும். இந்த ஒரு காரணத்திற்காக மக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை ஏற்கலாம்.  பெரும்பாலான சிறுவணிகர்களுக்கு இந்த பண்டிகைகள் கொஞ்சம் போனசாக வருமானத்தை கொடுக்கும். தீடிரென முளைக்கும் சாலைகடைகள், தன்னை பெரிதாக அலங்கரித்துகொள்ளும் பெரிய கடைகள் என இந்த பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.  ஆனால் இந்த ஆண்டு பண்டிகை நெருங்கினாலும் தொழில் நகரங்களில் பணப்புழக்கம் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். குறிப்பாக சிவகாசியில் கடைசி 20 நாள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது அப்படியெதும் இல்லை.  இவற்றுக்கெல்லாம் துணிக்கடைகள், பட்டாசுகடைகள் அதிகரித்திருப்பது ஒரு காரணமாய் இருந்தாலும் செலவழிக்கும் திறன் குறைந்திருக்கிறது என்கிறார்கள்.  அதாவது,பண்டிகைகளுக்கு செலவழிக்கும் தொகையை குறைத்திருக்கிறார்கள் அல்லது தேவையின் காரணமாக குறைந்திருக்கிறது. அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த பட்சம 7...

விஜய் தான் பிரச்சனை இங்க.. அரசியல் நடிப்பா யாருடைய இயலாமை இது..?

இங்கே நிறைய பேருக்கு விஜய் மேல நடிப்புக்கு அப்பாற்பட்டு பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்குனு நினைக்கிறேன் உண்மையை சொன்னா 'வலிமை'யை விட லியோ ஒரு எண்டர்டெயின் மூவிதான். என்ன ஒன்னு அவனுகளே ஏற்படுத்தின "எதிர்பார்ப்பை” அந்த படம் பூர்த்தி செய்யல.  தமிழ் சினிமாவில் "தளபதி” படமும் அப்படித்தான். பாட்டு, ரஜினி ஸ்டில், மம்மூட்டினு ஏக ஹைப். ஆனா படம் வேற மாதிரி இருந்துச்சு. முதல் ஒரு வாரம் தாண்டி படம் மெதுவா கீழே போச்சு. அப்புறம் விமர்சனம் விளம்பரம் எல்லாம் செஞ்சு படம் தப்பிச்சு ஓடுச்சு. லியோ படத்தை பொறுத்த வரை அந்த ஓவர் எதிர்பார்ப்பு தான் பிரச்சினையே. வெற்றிவிழா கொண்டாடலாமானு கேட்டா ? இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில படம் செலவழிச்ச தொகையை எடுத்துட்டாலே அது வெற்றிப்படம்னு ஆகிப்போச்சு. அப்படி பார்த்தா இது வசூலாச்சு. சரி வசூலாகலனு இருக்கட்டும். அதுனால நமக்கு என்ன ? இப்படி பொய்யா சொன்னா தயாரிப்பாளர் இல்லாமே போய்டுவான். அப்படி இல்லாமல் போன நடிகர்கள் இங்கே ஏராளம். யூடியூப், ரீல்ஸ், பேஸ்புக்னு ரொம்ப ஒவரா பேசிட்டே இருக்கானுக. விஜய் பட தயாரிப்பாளர்கள் அடுத்து விஜய் கூப்பிட்ட ஓடிப்போ...

Jovika விற்கு 🔥 விட்ட அறிவாளிகள் படிக்க வேண்டிய அவசிய பதிவு ⚠

அது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “. தான்.   ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எரிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எரி.. உனக்கு ஒரு டாலர் தரேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக்கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அது ஒரு நிகழ்ச்சி... தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். அதன் நவீன வடிவம் தான் பிக்பாஸ். அதில் பங்கேற்கும் பலரும் ஒரு விதத்தில் “செலிபிரேட்டி பைத்தியங்கள் “ கூடவே அதுக்கு கொஞ்சம் காசும் கொடுக்கிறாங்க என்பதுதான். பார்க்கும் மக்கள் எல்லாரும் முட்டாளாக்கிவிடலாம் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம்.ஆனால் அதனை நிஜமென நம்ப வைப்பார்கள். அதில் பேசப்படும் எல்லாமே சமூக கழிவுகளின்...

கடவுள் யாரை ஏமாற்றுகிறீர்கள்..? எல்லா மதத்திற்கும் ஒரு கடவுள் தான்..!

 9 நாளே நானே நடந்துக்குவேனு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசின பையன்.. இப்ப ஊழியம் பத்தியும் தன்னோட ஞான அருள் பத்தியும் பேட்டி கொடுத்திருக்கான். சமூகம் இவனை ரொம்ப சீரியசா எடுத்துக்கல... ஊழியம்ங்கிற பேர்ல இப்ப நிறைய காமெடி எல்லாம் நடக்குது. நகையை போடு. டான்ஸை போடுனு அது ஒரு பக்கம் போகுது. அதுல இதுவும் ஒன்னுனு கடந்து போகுது.  ஆனா எனக்கென்னமோ இந்த பையனை பார்க்கும் போது பெரிய பெரிய மத உபன்யாசகர் மாதிரி தான் தெரிஞ்சது. இங்க எல்லா மத்தையும் சேர்த்து தான் சொல்றேன். மதப் பெரியவர்கள் பேசுற எல்லார் பேச்சிலயும் இருக்கும் அதே நாடகதன்மை தான் இவனோட பேச்சிலயும் இருந்துச்சு. ஒருவேளை கடவுள் இருந்தா... அவருக்கு ஒரு அபிசேஷ மொழியோ, இல்ல அவரோட பெருமைகளை பேச ஊழியங்களோ, அவருக்கும் மனிதர்களுகும் இடையில் மீடியட்டரோ வச்சிருக்க மாட்டார். இதெல்லாம் செஞ்சா பாவம் இவ்ளோ குறையும், அதெல்லாம் கொடுத்த ஸ்பெஷலா சொர்க்கம் போய்டலாம் கண்டிப்பா கடவுள் சொல்லமாட்டார். இவனுக கட்டுன கோவில் ( எல்லா மதமும் தான் ) இவனுக உருவாக்குன மொழி, இவனுக உருவாக்குன சடங்கு, இவனுக உருவாக்குன வழிபாட்டு முறைனு ஒரு நாடகமே நடத்திட்டு இருப்பானுங்க....

அது எப்படி இந்த வயசுல மன அழுத்தம்..? உடையும் உருட்டு நியாயமாயிது..!

பதினாறு வயசுல என்ன மன அழுத்தம்னு நிறையபேரு கேட்கிறத பார்க்க முடியுது... இந்த கேள்வியை கேட்கிறது பெற்றோர்னா.... கொஞ்சம் நிதானமா படிங்க...  மனஅழுத்தத்திற்கும் வயசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை வெளிப்படுத்தற விசயத்தில வேணா வயசு தொடர்பாக இருக்கலாம். மற்றபடி மன அழுத்தம்ங்கிறது எல்லா உயிரினங்களுக்கும் எல்லா காலத்திலும் உண்டு. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட யானை அதிக மன அழுத்தத்தில் இருந்து பிறகு மீண்டும் இந்தியா கொண்டு வரப்பட்டதாக எல்லாம் செய்தி உண்டு (சிறிய நினைவூட்டல்).  அதுனால இந்த வயசுல என்ன அழுத்தம்ங்கிற முட்டாள்தனமான வாதங்களை விட்டுவிட்டு குழந்தைகளிடம் பேசுங்கள். கோச்சுக்காதிங்க, இங்கே பாதி பெற்றோர் வெற்று அதிகாரத்தில் தான் அம்மா அப்பானு வாழ்றிங்க... உங்க வெற்று பெருமைக்கு அவன் / அவள் பாடுபடனும் குதிக்கிறிங்க....   கடந்த மூணு மாசம் மட்டும் அவ்ளோ மோசமான பெற்றோர்களை பார்த்தேன். அதுவும் அந்த காலேஜ்ல படிச்சா தான் பெருமனு தரதரனு கொண்டு போய் சேர்த்து, அத மறைக்க அவனுக்கு பைக் ஆப்பிள் போனுனு வாங்கி கொடுத்த நாடககங்களையும் பார்த்தேன்.  உங்க பணம் மத...