முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தீடிரென பல இடங்களில் காட்சி பெறும் புத்தர்.. பெளத்த தத்துவங்கள் என்ன?

இப்போது புத்தரின் படங்களை பல தளங்களில் பார்க்கிறேன். அவையெல்லாம் புத்தர் குறித்து பேசுவன அல்ல. வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என்ற அழைப்பின் வெளிப்பாடுகள். அல்லது புத்தர் என்ற குறீயிட்டின் படி தாங்கள் யாரென்பதை சொல்லும் சாதி விசயங்கள்.  அம்பேத்கர் பெளத்தம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். அல்லது ஏற்க வைக்கப்பட்டார். அதே அம்பேத்கர் முதலில் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தான் சொல்கிறார். இஸ்லாம் கிறிஸ்தவம் என எங்கும் செல்லுங்கள் என்ற அழைக்கிறார். பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொஞ்சம் நிலை மாறுகிறார், பேசுகிறார். பின்னர் அவர் பெளத்தம் முழுமையாக தழுவுகிறார். ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட ஏதுமில்லை. மதம் என்பது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலகெங்கும் நாங்கள் எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா என தற்பெருமை பேசும் நிறுவனங்கள் தானே மதங்கள்.... இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொறு மதமும் ஒரு கொடுரத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது.  ஆனால் நாமெல்லாம...

நம்மிடையே மதம் காலாவதியானல் தான் மனிதம் பிறக்குமா..?

சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி. ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்...

கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வன் படத்தில் மாற்றமா..!எதனால் ஏன்?

பொன்னியின் செல்வன் முழுக்கமுழுக்க கற்பனை நாவல். இதனை கல்கியே ஒப்புக்கொள்வார். கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் இந்த கற்பனை உதயமாகிறது. சுந்தரசோழர் என்ற மன்னர் ஆட்சி செய்கிறார். அவருக்கு வானவன் மாதேவி என்ற ஒரு பட்டத்து ராணி. இருவருக்கும் மூன்று குழந்தைகள், ஆதித்த கரிகாலன் ( இரண்டாம் ), குந்தவை, அருள்மொழி. இதில் ஆதித்தகரிகாலைனை பட்டத்து இளவரசராக முடி சூடிய கல்வெட்டுகள் இருக்கிறது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எதிர்க்கும் வாரிசு அரசியல் போல எனக்கடுத்து இவர் தான் மன்னன்னு அறிவிப்பதற்கு பெயர் தான் பட்டத்து இளவரசர். இந்த கரிகாலனுக்கு மனைவியில்லை.  இந்த ஆதித்த கரிகாலன் தீடிரென மறைந்து போகிறார்.  விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் (உத்தமசோழன் – மதுராந்தகர்) அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனா...

காமெடி ட்ராக்கில் கலக்கிய வடிவேலுவா இப்படி மாறி(ரி)யுள்ளார்..!

நகைச்சுவை நடிகர்கள் திடிரென கொஞ்சம் எமோஷனலாக பேசும் போது கவனிக்கப்படும். வெளிப்பாடுகள் கொஞ்சம் சரியாக அமைந்துவிட்டால் அது கொண்டாடப்படும். எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எல்லாமே அப்படி கொண்டாடப்பட்டவையே. நாகேஷ்க்கு பிறகு நகைச்சுவை கூடவே கொஞ்சம் எமோஷனல் ஆக்டிங் என எவருக்கும் சரியாக வாய்க்கவில்லை என்றே கருதுவேன்.  கவுண்டமணிக்கு என சில படங்கள் இருந்தாலும் அதிலும் கொஞ்சம் செயற்கை தெரிந்தது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் கவுண்டர் நன்றாக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் ஈர்ப்பை கொண்டுவரவில்லை என்றே சொல்லுவேன். நடிகைகளில் மனோராமவிற்கு பிறகு யாருமே அங்கே வரவில்லை. அவர் முடிசூடா ராணியாகவே இருந்தார். நகைச்சுவை + எமோஷனல் என கடைசி வரை நடித்தார். நாகேஷ்க்கு பிறகு என்றால் எனக்கு வடிவேலு நியாபகம் வருகிறார். தேவர்மகனில் ஒரு காட்சியில் கலங்கடித்தவர் அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை பக்கமே பயணித்தார். ”பொற்காலம்” படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென டிராக் மாதிரி 4 நிமிட காட்சியில் படத்தையே தன் பக்கம் திருப்பிவிடுவார். நிமிடத்துக்கு முகபாவனையும் அதற்கேற்ற உணர்ச்சியும் மாற்ற தெரிந்த நட...

அயோத்தி படக் காட்சி உங்கள் வாழ்விலும் இப்படியொரு சூழலா

  அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார். இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும்  உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும்...

காங்கிரஸ் சித்தாந்தம் இல்லாமல் எப்படி செயல்படுகிறது..?

காங்கிரஸ் பேரியக்கம் ஏன் இப்படி தூங்கிகொண்டிருக்கிறது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.  யோசித்தால் காங்கிரஸ்க்கு என எந்த சித்தாந்தமும் இல்லை. நேற்று உருவான நாம் தமிழர் கூட உளரிக்கொண்டே இருந்தாலும், அடிப்படையாக ஒரு சித்தாந்தம் அவர்களால் சொல்ல முடியும். இந்த அடிப்படையில் நாட்டில் ஒரு பத்து கட்சி தேறும். ஆனால் காங்கிரஸ் அதில் வராது. முதலில் காங்கிரஸ் எதற்கு உருவானது ? மக்களுக்கு சேவை செய்யவா ? இல்லவே இல்லை. பிரிட்டிஷார் ஆட்சியில் அவர்கள் தனி, மக்கள் தனி, இங்கே உள்ள பழைய ஆண்டைகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் தனி என இருந்தன. இது அவர்களுக்கு நிர்வாக ரீதியாக சரியாகபடவில்லை.  அப்போது ஒரு உருவான ஒரு NGO தான் காங்கிரஸ். அதாவது பிரிட்டிஷாரிடம் மக்கள் பற்றி சொல்ல, அல்லது மக்களிடம் பிரிட்டிஷார் பற்றி சொல்ல, இவ்ளோதான் காங்கிரஸ் உருவான வேலை. இதனைதான் செவ்வணே பல ஆண்டுகள் செய்தார்கள். பிறகு மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து போராட, காங்கிரஸ் அந்த கலககுரலை அங்கே சொன்னது. பின்னர் அதுவும் கொஞ்சம் கலககுரலை எழுப்பியது. பிறகு காந்தியாரை உள்ளே இழுத்துபோட ஒட்டுமொத்த கதையும் மாற...

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ₹1000 எதுக்கு தரங்கனு தெரியுமா..?

ஒரு முறை தனியார் தொலைக்காட்சியில் பணியில் இருக்கும் பெண்கள் அவர்கள் கணவர்கள் பேசினார்கள். அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண்களில் 98% பேரின் ஏடிஎம் கார்டு அவர்கள் கைகளில் இல்லை. கணவர் கைகளில் தான் இருந்தது. அதில் 75% பேருக்கு பாஸ்வேர்டு கூட தெரியாது. இவர்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதனை சொல்லி பணம் எடுத்து தர சொல்லுவோம் என்றார்கள். இவர்கள் எல்லாரும் படித்த ஆசிரியர் வங்கி போஸ்ட் ஆபிஸ் என்ற பெரிய வேலையில் இருப்பவர்கள். இன்னொரு  பக்கம் கிராமங்களில் அல்லது எளிய குடும்பங்களில் வேறு கதை. மனைவியின் சம்பளத்துக்கு கணவர்கள் 25ம் தேதியே செலவு கணக்கு எழுதிடுவார்கள். வாடகை, ஈபி பில், வட்டி, சீட்டு என கணக்கு இருக்கும். இவர்கள் பெட்ரோலுக்கு, ஆபிஸ் கொலிக் திருமணத்திற்கு கிப்ட் என நிற்க வேண்டும். அதிலும் அவர்கள் தான் தொகை முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளம் எவ்வளவு, ஏன் குறைவாக கொடுக்கிறார் என்றெல்லாம் மனைவியால் கேட்கவே முடியாது. என் கம்யூனிஸ்டு  தோழர்  ஒருமுறை இதுகுறித்து பேசிய போது ஒன்று சொன்னார், ஒரு பெண் தன் சம்பளத்தில் இருந்து தன் அலுவலகத்தின் கடை நிலை ஊழியர் பெண் படிப்பு...

உலகமே புரிய நீங்கள் இங்கு சென்று அமர்ந்து தான் பாருங்களேன்..!

பேருந்தில்லோ அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் யாருடை காலையாவது தெரியாமல் மிதித்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தெரிந்தே நம் உடனிருப்போர் குரல்வளையை நெரித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதை எத்தனை பேர் உணர்த்திருக்கிறோம். ஒரு சில தினங்களாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை மிகப்பெரிய நவீன வசதிகளை கொண்ட பிரபல மருத்துவமனை. என் பெரியப்பா ஐசியூவில் இருப்பதால்... நான் வெளியில் தான் இருக்கவேண்டும்.(பேஸ் மேக்கர் பொருத்தியிருக்கிறார்கள்... பயப்படும்படி தேவையில்லை).  மொத்தம் நான்கு பிளாக்குகள்... என்னிடம் பாஸ் இருப்பதால்.. சரி கொஞ்சம் சுற்றிப்பார்ப்போம்(?!) என பிளாக் பிளாகாக கிளம்பினேன். ஒட்டுமொத்த வார்டில்/ஐசியூவில்... வயதானவர்கள் 25% மட்டுமே.... 45 முதல் 55 வயதுவரை உள்ளவர்களே அதிகம்... காரணம்.. தவறான உணவுகள்.... உடல் பருமனால் மற்ற உறுப்புகள் செயல் இழப்பு... தவறான வாழ்க்கை முறை. ஐசியூவில் என் பெரியப்பாவுக்கு அருகிலிருந்தவர்... மிகப்பெரிய வக்கீல்... அவருக்கான சிகிச்சைக்கு பத்து லட்சம் கட்டவேண்டியிருக்கிறது... அவரது மகன் இப்போது ஏதோ கல்லூரியில் படிக்கிறான் போல... அவர் அழுதுகொ...