முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மணிப்பூர் மக்களால் சொல்ல முடிய கதை.. வன்முறைக்கு பின்னால் என்ன ..?

ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை.  இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர...

I.N.D.I.A கூட்டணியில் அனைவரிடமும் ஒரே ஒரு ஒற்றுமை.. தேர்தலில் வெற்றி கிட்டுமா..?

இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா ?  இவர்கள் எல்லாருக்கும் ஒரே சித்தாந்தமா ?  இவர்கள் எல்லாரும் தேர்தல் வரை ஒற்றுமையாக தொடர்வார்களா ?  இவர்களுக்குள்ளே மாநிலத்தில் பிரிவினைகள் உண்டே ? இப்படி பல கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடும். அது எதுவும் மறுப்பதிற்கில்லை. ஆனால் ஒரே ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் அனைவரின் எதிரி ஒருவர் தான். அதுவும் மோசமான, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என பார்ப்பனியத்திற்கு சொம்பு தூக்கும் மதவெறி ஒருவர் தான் இவர்களின் எதிரி.  இந்த பத்து ஆண்டுகளில் நாம் பின்னால் தள்ளி போயிருக்கிறோம். அவர்கள் சொல்லும் புள்ளிவிபரங்கள் எல்லாமே பொய் என அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்லுவார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவு, வாட்சப்பில் கதை சொல்லவும் தான் மூளை மழுங்கிய மத கூட்டம் இருக்கிறதே...  விவசாயிகள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், டில்லி கல்லூரி மாணவர்கள் போராட்டம், வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் போராட்டம் எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள்.   ஒரு ஆட்சியில் போராட்டம் நடப்பது என்பது இயல்பானது. ஆனால் அதனை அடக்க இந்த மூடர் கூடம் செய்யும், பேசும் விடயங்களை கவன...

திரைகளில் தோன்றும் சாதி ஏற்றத்தாழ்வு..! சினிமாவின் நகர்வில் எது தேவை..?

அந்த படத்தில் அவர் பெரிய பண்ணையக்காரர். அவருக்கு ஒரு ப்ரண்ட். ஆனா அவரு சாதி அந்த பண்ணையக்காரர் சாதிக்கு கீழ தான். இங்கே சனாதன இந்து மதம் அப்டிதானே இருக்கு. என்னதான் ப்ரண்டா பழகினாலும் பண்ணையகாரருக்கு இவர் வேலைக்காரர் தான். நம்பிகையான நட்பான வேலைக்காரர். அது ஒன்னும் தப்பில்லை. இந்த சூழலில் ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போறாங்க… அங்க அந்த பண்ணையக்காரர் அவர் பக்கத்தில அவரோட நண்பர உக்காந்து சாப்பிட சொல்ல… அங்க இருக்கிற எல்லாரும் அத எதிர்க்கிறாங்க, சாப்பிடமாட்டோம்னு எந்திரிச்சு நிக்கிறாங்க, ஏன்னா சாதி. உடனே பண்ணையக்காரரும்.. அவளோதானே டேய் எந்திரிடானு நண்பனை பார்த்து சொல்லவும், நண்பன் சொல்றானு அவனும் எந்திரிக்கிறான். எல்லாரும் சாப்பிட தொடங்கியதும், இந்த பண்ணையக்காரர் இலையை மூடிட்டு சாப்டாம போய்டுறார். நட்பு தான் பெருசுனு. இந்த படம் நல்லா ஓடுச்சு. இந்த சீன் பார்த்து சில்லறையை சிதறவிட்டவங்க உண்டு. இப்ப இப்படி யோசிப்போம்.. ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ப்ரண்ட் நான் ஏண்டா இங்க உக்காந்து சாப்பிட கூடாதுனு ஊரை பார்த்து உரக்க கேட்டிருந்தா ?  ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ஏண்டா இவன் சாப்பிட்டா உங்களு...

தீடிரென பல இடங்களில் காட்சி பெறும் புத்தர்.. பெளத்த தத்துவங்கள் என்ன?

இப்போது புத்தரின் படங்களை பல தளங்களில் பார்க்கிறேன். அவையெல்லாம் புத்தர் குறித்து பேசுவன அல்ல. வாருங்கள் பெளத்தம் ஏற்போம் என்ற அழைப்பின் வெளிப்பாடுகள். அல்லது புத்தர் என்ற குறீயிட்டின் படி தாங்கள் யாரென்பதை சொல்லும் சாதி விசயங்கள்.  அம்பேத்கர் பெளத்தம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்பேத்கர் பெளத்தம் ஏற்றார். அல்லது ஏற்க வைக்கப்பட்டார். அதே அம்பேத்கர் முதலில் இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தான் சொல்கிறார். இஸ்லாம் கிறிஸ்தவம் என எங்கும் செல்லுங்கள் என்ற அழைக்கிறார். பேசுகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொஞ்சம் நிலை மாறுகிறார், பேசுகிறார். பின்னர் அவர் பெளத்தம் முழுமையாக தழுவுகிறார். ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில் நாம் தலையிட ஏதுமில்லை. மதம் என்பது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உலகெங்கும் நாங்கள் எவ்ளோ பேர் இருக்கோம் தெரியுமா என தற்பெருமை பேசும் நிறுவனங்கள் தானே மதங்கள்.... இதில் எதுவும் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொறு மதமும் ஒரு கொடுரத்தை செய்துகொண்டுதான் இருக்கிறது.  ஆனால் நாமெல்லாம...

நம்மிடையே மதம் காலாவதியானல் தான் மனிதம் பிறக்குமா..?

சிறியதை பெரியது விழுங்கும். பெரியதை அதனினும் பெரியது விழுங்கும். இது ஒரு முடிவிலி. தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆலயங்களில் வாசலில் இருப்பவர்கள் கேட்கும் பிச்சையை நாம் கொடுத்தால் நாம் கேட்கும் பிச்சையை ஆண்டவன் தீர்த்து வைப்பார். கிட்டதட்ட எல்லா மதங்களின் சாரம்சம் இதுதான். அந்த நம்பிக்கையில் தான் அவர்கள் ஆலயத்தின் முன்னால் நிற்கிறார்கள் நம்மை நம்பி. ஒரு மனிதன் சகமனிதனுக்கு உதவுதல் என்பது இயல்பான ஒன்று. என்னைப் பொறுத்துவரை அதுதான் வாழ்வியல் அடிப்படை. யாரோ யாருக்கோ உதவிக்கொண்டே இருக்கிறார்கள் உலகில். இதில் இறைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இறை புகுத்தப்படுகிறது. காரணம் சொர்கம், மறுமை, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு என அவைகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. விளைவு மனிதம் தாண்டி இறைவன் பெயரால் தர்மம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். உன்னால் முடியும் தம்பி...படத்தில் ஒரு குருட்டு கிழவியின் கையில் இருந்து வாழைப்பழம் கீழே விழுந்துவிடும். வாயில் மந்திரம் முணுமுணுத்துக்கொண்டே நகரும் ஒரு இளைஞன் அவளுக்கு அந்த பழத்தை எடுத்த தர உதவமாட்டான். காரணம் அவன் அதனினும் பெரிய தர்மமான மந்திரத்தை முணுமுணுத்துக்...

கல்கியே கன்பியூஸ் ஆகும் அளவுக்கு.. பொன்னியின் செல்வன் படத்தில் மாற்றமா..!எதனால் ஏன்?

பொன்னியின் செல்வன் முழுக்கமுழுக்க கற்பனை நாவல். இதனை கல்கியே ஒப்புக்கொள்வார். கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் இந்த கற்பனை உதயமாகிறது. சுந்தரசோழர் என்ற மன்னர் ஆட்சி செய்கிறார். அவருக்கு வானவன் மாதேவி என்ற ஒரு பட்டத்து ராணி. இருவருக்கும் மூன்று குழந்தைகள், ஆதித்த கரிகாலன் ( இரண்டாம் ), குந்தவை, அருள்மொழி. இதில் ஆதித்தகரிகாலைனை பட்டத்து இளவரசராக முடி சூடிய கல்வெட்டுகள் இருக்கிறது. அதாவது இன்றைக்கு எல்லாரும் எதிர்க்கும் வாரிசு அரசியல் போல எனக்கடுத்து இவர் தான் மன்னன்னு அறிவிப்பதற்கு பெயர் தான் பட்டத்து இளவரசர். இந்த கரிகாலனுக்கு மனைவியில்லை.  இந்த ஆதித்த கரிகாலன் தீடிரென மறைந்து போகிறார்.  விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் (உத்தமசோழன் – மதுராந்தகர்) அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனா...

காமெடி ட்ராக்கில் கலக்கிய வடிவேலுவா இப்படி மாறி(ரி)யுள்ளார்..!

நகைச்சுவை நடிகர்கள் திடிரென கொஞ்சம் எமோஷனலாக பேசும் போது கவனிக்கப்படும். வெளிப்பாடுகள் கொஞ்சம் சரியாக அமைந்துவிட்டால் அது கொண்டாடப்படும். எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் எல்லாமே அப்படி கொண்டாடப்பட்டவையே. நாகேஷ்க்கு பிறகு நகைச்சுவை கூடவே கொஞ்சம் எமோஷனல் ஆக்டிங் என எவருக்கும் சரியாக வாய்க்கவில்லை என்றே கருதுவேன்.  கவுண்டமணிக்கு என சில படங்கள் இருந்தாலும் அதிலும் கொஞ்சம் செயற்கை தெரிந்தது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் படத்தில் கவுண்டர் நன்றாக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் ஈர்ப்பை கொண்டுவரவில்லை என்றே சொல்லுவேன். நடிகைகளில் மனோராமவிற்கு பிறகு யாருமே அங்கே வரவில்லை. அவர் முடிசூடா ராணியாகவே இருந்தார். நகைச்சுவை + எமோஷனல் என கடைசி வரை நடித்தார். நாகேஷ்க்கு பிறகு என்றால் எனக்கு வடிவேலு நியாபகம் வருகிறார். தேவர்மகனில் ஒரு காட்சியில் கலங்கடித்தவர் அடுத்து முழுக்க முழுக்க நகைச்சுவை பக்கமே பயணித்தார். ”பொற்காலம்” படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென டிராக் மாதிரி 4 நிமிட காட்சியில் படத்தையே தன் பக்கம் திருப்பிவிடுவார். நிமிடத்துக்கு முகபாவனையும் அதற்கேற்ற உணர்ச்சியும் மாற்ற தெரிந்த நட...

அயோத்தி படக் காட்சி உங்கள் வாழ்விலும் இப்படியொரு சூழலா

  அது ஒரு போஸ்ட்மார்ட்டம் அறை. அன்றைக்கு தீபாவளி வேறு. ஏதோ ஒரு ஆக்சிடெண்ட் என 13 உடல்கள் வந்திருக்கிறது. ஒரு 13 வயது சிறுவன் தந்தை வெடி வாங்கி தரவில்லை என்ற தற்கொலை செய்திருக்கிறான். அவன் உடலும் அங்கே இருக்கிறது. அவனின் உறவுகள் எல்லாம் வெளியே கதறியபடி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து அவன் உடல் வெளியே வருகிறது. ஒட்டுமொத்த சொந்தமும் கதறுகிறது. ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, அங்கே அழுது கொண்டிருக்கும் பெரியவரிடம் போஸ்ட் மார்ட்டம் செய்யும் ஊழியர்கள், அய்யா இன்னைக்கு தீபாவளி என்கிறார்கள், அவரும் அழுபடியே சட்டைபையில் இருந்து ரூபாய் எடுத்து கொடுக்கிறார். அந்த காக்கி டவுசர் அணிந்த ஊழியர் வாங்கிகொண்டு அடுத்த உடலை எடுக்க செல்கிறார். இந்த காட்சி அப்படியே அயோத்தி படத்தில் வருகிறது. இப்படியான ஒரு சூழலை நீங்களும்  உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பீர்கள். என்ன, அது போஸ்ட்மார்ட்டம் அறையாக இருக்காது, தகனமேடையில் சந்தித்திருப்போம். நமக்கான ஒரு உறவு இனி உடலாக கூட இருக்க போவதில்லை எரிக்க போகிறோம் என்ற சூழலில் நாம் நின்று கொண்டிருப்போம். நாமோ அல்லது நம்மில் ஒருவரோ தனல் ஊட்டுவார்கள். எரிந்துகொண்டிருக்கும்...